எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, அக்.12 பொறியியல் கல்லூரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.அய்.சி.டி.இ., கட்டுப்பாட்டில், பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு, நுலக, ஆய்வக வசதிகள், ஆசிரி யர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, கல்லூரிகளின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பொறியியல் கல்லூரிகளுக்கு, அங்கீ காரம் புதுப்பிக்கப்பட வேண் டியது கட்டாயம். என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர அமைப் பின் அனுமதி பெற்ற கல்லூரிகள் மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப் பிக்கலாம்.

இந்நிலையில், வரும் கல்வி யாண்டில், பொறியியல் கல்லூரி களின் அங்கீகாரத்தை புதுப்பிப் பதற்கான விதிகள், நவ., இறுதி யில் அல்லது டிச., முதல் வாரத் தில், ஏ.அய்.சி.டி.இ.,யால் வெளியிடப்பட உள்ளன.
அடுத்த ஆண்டுக்கான விதி களில், பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்ப டுகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு கல் லூரியும், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மய்யம் ஏற்படுத்த வேண்டும்; தொழிலக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்; திறன்சார் பயிற்சிகளை, மாண வர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கலாம்.

புதிய விதிகள் குறித்து, உயர்மட்டக் குழு இறுதி ஆய்வு செய்வதாக, ஏ.அய்.சி.டி.இ., தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner