எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அதுமட்டுமல்ல நண்பர்களே, நேற்றுகூட சாதாரணமாக, மென்மையாக, சாதுபோன்று இருக்கக்கூடிய ஒரு அம்மை யார் அவர்கள் - பா.ஜ.க.வினுடைய தலைவர்கூட சொல் லுவார் - ‘‘பண மதிப்பிழப்பு மூலமாக என்ன சாதனை செய்தி ருக்கிறார் மோடி அவர்கள் தெரியுமா? பேசாத மன்மோகன் சிங்கை பேச வைத்தார்’’ என்று.

மன்மோகன்சிங் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?

November 8 was a black day: Manmohan

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அவர் பேசியதை இங்கே சுட்டிக்காட்டினார்கள். வெளிப்படையான கொள்கை என்று சொன்னார்கள்.

நேற்று அகமதாபாத்தில் மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், நிதித்துறையில் அவர் ஒரு பெரிய பொரு ளாதார நிபுணர். அப்படிப்பட்டவர் இதற்குமுன் அவர் சொன் னதைப் படித்துவிட்டு,

Dr. Singh stressed that none of the stated objectives of the currency ban had been achieved and yet the Central government, instead of drawing any lesson from its monumental mistake, went ahead and implemented GST, which has adversely hit the economy and the growth rate.

“This twin blow is a complete disaster for our economy. It has broken the back of small and medium businesses in the country,” he said, citing how the textile industry in Surat and the ceramic plants in Morbi had been affected.

Terming the GST as a badly designed and hastily implemented tax system, he said the GST - as envisioned by the UPA - was supposed to simplify taxation, with a single tax capped at 18%, to make life easier for businessmen.

“The current GST is a great departure from that vision. It has transformed into a complicated mess, with multiple slabs and rates as high as 28%, along with additional cesses,” he said, stressing that the government had ignored the advice of the Opposition parties in Parliament as well as in private consultations.

Dr. Singh also charged the Modi government with “tax terrorism” in the name of fighting corruption in the country.

“Along with demonetisation, GST has sown a deep-rooted fear of tax terrorism among the business community. At a time when the economy has slowed down considerably, despite favourable global macroeconomic conditions, the fear of tax terrorism has eroded the confidence of businesses to invest.”

- The Indian Express

‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்த அரசு நாட்டை பொருளாதாரச் சிக்கலில் தள்ளியதே தவிர, நன்மை ஒன்றும் ஏற்படவில்லை. பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ளாமல் அதன் பாதிப்புகளில் இருந்து மீளும் முன்பாகவே ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தியது இந்தியா வின் பொருளாதரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. இந்த இரண்டு நடவடிக் கைகளும் நாட்டை புரட்டிப்போட்டு விட்டது. சிறு குறு மற்றும் குடிசைத் தொழில்கள் நாடு முழுவதும் முற்றிலும் முடங்கிவிட்டன.  நாட்டின் மிகமுக்கிய ஆடை வர்த்தக நகரமான சூரத் மற்றும் பளிங்குகல் விற்பனை நகரமான மோரபி போன்றவை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த அரசு ஜி.எஸ்.டி.-அய் மிகவும் மோசமான ஒரு திட்டமாக உருமாற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. நாங்கள் தான் ஜி.எஸ்.டி. வரிமுறையை உருவாக்கினோம்; நாட்டில் தொழில்முறைகள் எளிதாக மாறவும் வணிகர் களுக்கு சிரமமில்லாத வரிவசூல் முறைக்காக உருவாகப் பட்டதுதான் ஜி.எஸ்.டி ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் பல்வேறு குளறுபடியான வரிவிதிப்பு முறைகளை திணித்துவிட்டார்கள்

தற்போது இந்த அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. இந்திய பொருளாதாரப் பார்வையை சிதைத்துவிட்டது. புரிந்துகொள்ள மிகவும் சிக்கலான வரிவிதிப்பு முறை. பல அடுக்கு வரிகள் அதிகமாக 28% வரிகள் போன்றவை வரிவிதிப்பு முறையை எளிதாக்காமல் மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திவிட்டார்கள். எதிர்க் ட்சிகளின் ஆலோசனைகளை முற்றிலும் ஏற்காமல், தனியார் நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த வரி விதிப்பை கொண்டுவந்துள்ளார்கள். இந்த வரிவிதிப்பு என்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது, இது வரித் தீவிரவாதமாக மாறிவிட்டது. ஆனால், மக்களை ஏமாற்ற ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று இதற்குப் பெயர் சூட்டிவிட்டனர். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி இரண்டும் இந்தியப் பொருளாதார வேரை அசைத்துப் பார்த்து விட்டது, உலகம் முழுவதும் எளி மையான வரி விதிப்புப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கை களை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும்போது, அதுபற்றி அக்கறை காட்டாமல் கொண்டுவந்த  இந்த வரி நடவடிக்கையால் முதலீட்டளர்களின் நம்பிக்கைகளை தகர்த்துவிட்டது.’’               - டாக்டர்

மன்மோகன் சிங்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner