எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜெய்ப்பூர், நவ-.13 ராஜஸ்தானின் பாஜக அரசு, அங்குள்ள இந்து அமைப் புகளுடன் இணைந்து தேசப்பற்றை வளர்ப்போம் என்று கூறி "வந்தே மாதரம்" என்னும் நிகழ்ச்சியை நடத் தியது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியில் அசோகச்சக்கரம் இல்லை,  பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப் பட்ட தேசியக் கொடியிலும் அசோகச் சக்கரம் இல்லை, மேலும் பள்ளி மாண வர்களுக்குக் இந்தியா என்பது ஆப் கான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் உள்ளிட்ட அகண்ட பகுதியே என்று கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக் கமாக எதிர்கால இளைஞர்களுக்கு சமூதாயச்சீர்கேட்டில் இருந்து தங் களைக் காத்துக் கொள்வது, இந்துமத கலாச்சாரத்தை மதிக்கப் பின்பற்றக் கற்றுக் கொள்வது, தேசப்பற்று, ஆன் மீகத் தொண்டு மற்றும் ஒழுக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய சேவை மய்யம், என்சிசி, ராஜஸ்தான் சாரணர் படையினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 50,000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர். இது தேசியத்தை இளைஞர்களுக்கு புரிய வைக்கும் நிகழ்வு எனச் சொல்லப் பட்டது.  இந்த விழா துவக்கத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அரசு சார்பில் ஏற்றப்பட்ட அந்தக் கொடியில்  மூவர்ணக் கொடியின் இடையில் உள்ள அசோகச் சக்கரம் காணப்படவில்லை.

நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களின் 12 இடங்களில் தேசியக் கொடிகள் காணப்பட்டன. அத்துடன் மைதானத் தில் பெரிய அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.  கலந்து கொண்ட அனை வருக்கும் தேசியக் கொடிகள் வழங்கப் பட்டன.    ஆனால் எந்த ஒரு கொடியிலும் அசோகச் சக்கரம் காணப் படவில்லை.   விழாவில் கலந்து கொண்ட பல மாணவ -- மாணவிகளும் அசோகச் சக்கரம் காணப் படாததை கவனிக்கவில்லை. விழா முடிந்ததும் கலந்து கொண்ட பல மாணவ - மாணவிகள் அந்தக் கொடிகளைக் கிழித்துக் குப்பையைப் போல வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னுக்குத் தள்ளப்பட்ட பெண்கள்

இந்த விழாவில் ஆண்கள் முன்பகுதி யிலும், பெண்கள் பின்பகுதியிலும் அமரவைக்கப்பட்டனர். இதற்குக் காரணம் கூறிய விழா ஏற்பாட்டாளர்கள் "ஆண்பால் மாணவர்கள் நிகழ்ச்சியை நன்றாகக் கவனிப்பார்கள்; பெண்பால் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்; ஆகையால் தான் மாணவிகளை தனியே பின்னால் அமரவைத்துள்ளோம்" எனக் கூறினர்.

இந்தித் திரைப்பட இசை அமைப் பாளர்  இசை அமைப்பில் வந்தே மாதரம் மாணவர்களால் இசைக்கப்பட் டது. பிறகு இந்தித் திரைப்பட பாடல் கள் இசைக்கப்பட்டு அவற்றுக்கு மாணவ - மாணவிகள் அருவருக்கத்தக்க வகையில் ஆடியுள்ளனர்.

இந்து அமைப்புகள் தேசியக் கொடியை எப்போதும் ஏற்பதில்லை, மேலும் இந்திய வரைபடத்தையும் ஏற்பதில்லை. இந்த நிலையில் அரசு நிகழ்ச்சியில் தேசியக்கொடியை அவம திக்கும் விதமாக நடந்து கொண்டதும்? அசோகச்சக்கரம் இல்லாமல் கொடி யேற்றியதும், அதற்கு மாநில அரசு சார்பில் மரியாதை செய்ததும் விதி முறைக்கு மீறிய செயலாகும் என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

மேலும் மாணவ - மாணவிகள் இந்தி திரைப்பட இசைக்கு ஏற்ப கொச் சையாக, ஆபாசமாக நடனமாடி அமைச்சர்களும் இதர உயரதிகாரிகளும் அதை வேடிக்கையும் பார்த்துள்ளனர். இதனால் இந்த விழா பெரும் சர்ச் சைக்கு உள்ளாகி இருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner