எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.2  நாடு முழுவதும் கடந்த 2016-17-ஆம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பயணம் செய்துள்ளனர். இத னால், ரயில்வே துறைக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நாடா ளுமன்ற குழு கவலை தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையில் நிலவும் முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய் யப்பட்டது. அதில், ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்ப வர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதைக் கண்டு, நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது. ரயில்களில் டிக்கெட் வாங்காமல், அல்லது நடைமேடை டிக்கெட் வாங்கா மல் பணிப்பவர்களிடம் இருந்து, அவர்களின் பயணக் கட்டண மும், அபராதமாக, தலா

ரூ.250-ம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2016--17-ஆம் நிதியாண் டில், 2 கோடிக்கும் அதிகமா னோர் ரயில்களில் டிக்கெட் வாங்காமல் பயணித்திருப்பதாக வும், அவர்களிடம் இருந்து ரூ.935.64 கோடி ரூபாய் வசூ லித்திருப்பதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக, வடக்கு ரயில்வேயில் 26.40 லட்சம் பேர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் இருந்து 25.86 லட்சம் பேரும், மத்திய ரயில்வேயில் இருந்து 24.24 லட்சம் பேரும், மேற்கு ரயில்வேயில் இருந்து 20.24 லட்சம் பேரும், கிழக்கு மத்திய ரயில்வேயில் இருந்து 18.62 லட்சம் பேரும், வடக்கு மத்திய ரயில்வேயில் இருந்து 16.56 லட்சம் பேரும், வடகிழக்கு ரயில்வேயில் இருந்து 12 லட்சம் பேரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், குறைவாக வருவாய் ஈட்டும் ரயில்வே மண்டலங்கள் அல் லது டிக்கெட் பரிசோதனை நடத்தாத மண்டலங்களை ரயில்வே துறை கண்டறிந்துள் ளது. அந்த மண்டலங்களில் டிக்கெட் பரிசோதனை கண் காணிப்பை பலப்படுத்த வேண் டும். மேலும், டிக்கெட் இல்லா மல் பயணிப்பவர் களைக் கண்டறிவதற்கு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை ரயில்வே துறை உருவாக்க வேண்டும் என்று அந்தக் குழு தெரிவித் துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner