எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜன.8 மகாராட் டிரத்தில் அண்மையில் நடை பெற்ற கலவரத்துக்கு காரண மானவர்களைக் காப்பாற்ற அந்த மாநிலத்தை ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலை மையிலான பாஜக அரசு முயற் சிப்பதாக பகுஜன் சமாஜ் கட் சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் (6.1.2018) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புனே அருகே பீமா- கோரே கான் பகுதியில் அண்மையில் நடைபெற்ற கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் சமஸ்த் இந்து அகாதி அமைப் பைச் சேர்ந்த மிலிந்த் ஏக்போத், சிவ பிரதிஷ்டா இந்துஸ்தான் அமைப்பு நிறுவனர் சம்பாஜி பிடே ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த அனுமதிக்காததில் இருந்து, மத்திய மற்றும் மகாராட்டிர மாநில அரசுகளின் ஜாதி வெறி தெரிகிறது. தலித்துகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில், மகாராட்டிர அரசு தோல்வி யடைந்தது எனில், அதற்கு கார ணமானவர்களை தீர்மானிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.

வன்முறைத் தொடர்பாக 2 தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதி லும், இதுவரையிலும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதிலிருந்து குற்றவாளிகளைக் காக்க மகாராட்டிரத்தை ஆளும் பாஜக அரசு முயலுவது நிரூப ணமாகியுள்ளது.

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக அரசுக்கு அந்த மாநில மக்கள் தக்க பதி லடி கொடுத்துள்ளனர். அதே போல், மகாராட்டிர மக்களும் தங்கள் மாநில அரசுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளோடு இது நின்று விடாது. ஏழைகள் மற் றும் பிற்படுத்தப்பட்ட ஜாதி களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகள் தொடரக் கூடும் என்று அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner