எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி, ஜன. 8- சாக்லெட் பழுப்பு (பிரவுன்) நிறத்தில் புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரை வில் புழக்கத்தில் விடவுள்ள தாக ரிசர்வ் வங்கி அறிவித்துள் ளது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தி புதிய வரி சையில், இந்த 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. சாக்கெலட் பிரவுன் கலரில் வெளிவரவிருக் கும் இந்த புதிய 10 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் ஆர் படேல் கையெழுத்து இடம்பெற்றிருக் கும். ரூபாய் நோட்டின் முன் புறத்தின் நடுவே மகாத்மா காந்தி உருவப்படமும், வலது பக்கத்தில் அசோகா தூண் சின்னமும் இடம்பெற்றிருக் கும். ரூபாய் நோட்டின் பின் புறத்தில், இந்தியாவின் பாரம் பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக் கும் வகையில் கோனார்க்கில் உள்ள சூரியக் கோயிலின் படம் அச்சிடப்பட்டிருக்கும். ரூ.10 என்பது தேவநகரி மொழி யில் எழுதப்பட்டிருக்கும் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும், வாசகமும் அதில் இடம்பெற்றிருக்கும். 63மிமீ ஜ் 123 மிமீ அளவில் இந்த நோட் டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

புதிய நோட்டுகள் புழக்கத் துக்கு வந்தாலும் ஏற்கெனவே உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner