எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப்.9  மத்திய நிதிநிலை அறிக்கையில், 2018-- 2019 ஆம் ஆண்டுக்கு தமிழகத் துக்கான ரயில்வே திட்டங் களை நிறைவேற்ற ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரூ. 1 லட்சத்து

48 ஆயிரத்து

548 கோடி

2018 ---2019-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக் கையை பிப்.1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒட்டுமொத் தமாக இந்திய ரயில்வே துறைக்கு ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு

ரூ.2,548 கோடி

இந்நிலையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் செவ் வாய்க்கிழமை வெளியிடப் பட்டது. அதில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

27 ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு: இந்நிதியில், மிக முக்கியமாக ரூ 376 கோடி செலவில், பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் இருந்து ஓசூருக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.20 ஆயி ரத்து 64 கோடி மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் 3 ஆயிரத்து 198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

2017 - 2018 ஆம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங் களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டது.

கூடுதலாக

ரூ.261 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில், இவ் வாண்டு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.261 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதில் சேலம் - ஓமலூர் இடையிலான புதிய ரயில்வே பாதைக்கு ரூ.76.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மின்மயமாக்கல் பாதைகளுக்கு ரூ.404 கோடியும், போக்கு வரத்து மேம்படுத்தும் பணிக ளுக்கு ரூ.19.17 கோடியும், மாநகர ரயில் திட்ட மேலாண் மைக்கு ரூ.14 கோடியும், ரயில்வே சுரங்கப் பாதை மற் றும் மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு ரூ.382 கோடியும் ஒதுக்கி பணிகள் நடைபெறு கின்றன.

மிக முக்கியமாக ரயில் நிலையங்களில் பயணிகளின் அடிப்படை வசதியை மேம் படுத்த ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களான கேரளத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 923 கோடி, கர்நாடகத்திற்கு ரூ.3, 353 கோடி, தெலங் கானாவுக்கு ரூ.1,813 கோடி, ஆந்திர மாநிலத்துக்கு ரூ.3,670 கோடி என ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner