எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சித்தூர், பிப்.9 பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டது. மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆந்திரா வுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. இதை கண்டித்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையெட்டி மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. இருப்பினும் தடையை மீறி நேற்று அதிகாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்றது. அனைத்து பேருந்துகளும் டெப்போக்களில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் கூட்டமின்றி பேருந்து நிலையம் வெறிச்சோடியது. பெட்ரோல் பங்க் குகள், திரையரங்குகள், வணிக நிறு வனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப் பட்டிருந்தது. இதற்கிடையில் சித்தூர் காந்தி சிலை அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறிய லிலும் ஈடுபட்டனர்.

திருப்பதி

திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நகரி தொகுதி எம்எல்ஏ. ரோஜா தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். போக்குவரத்து முற்றிலும் தடைபட்ட தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு

சித்தூரில் என்டிஆர் சிலை அருகே ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி கேட்டு மாநகராட்சி மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில், துணை மேயர் சுப்பிர மணியம், தெலுங்கு தேசம் மாவட்ட மகளிர் அணி தலைவி வைகை ராஜேஸ்வரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், திருப்பதி என்டிஆர் சிலை அருகே எம்எல்ஏ சுகுணா தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner