எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, பிப்.9 நில மோசடி புகாரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம், பாட்னா அருகே அசோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் நாராயண் என்பவர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தமது 2 ஏக்கர் நிலத்தை, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட 33 பேர் அபகரிக்க முயல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கிரிராஜ் சிங் உள்பட 33 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து,  கிரிராஜ் சிங் மீது தனாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து தானாபூர் காவல்துறை அதிகாரி சந்தீப் சிங் குமார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி 2இல் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டணை சட்டம் 156(3)இன் படியும், எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தற்போது பீகார் மாநிலம் நவாடா தொகுதி எம்பியாக உள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அமைச்சர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner