எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுச்சேரி,மார்ச்5 மத்திய-மாநில அரசுகள் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் வகையில் செயல்பட வேண் டும் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் "சட்டஅமலாக்க அலுவலர்கள் மற்றும் நீதி நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 3 ஆம் தேதி மாலை நடைபெற்ற இதன் இறுதிநாள் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: நமது நாட்டின் சட்டத்தை பின்பற்ற வழிகாட்டியாகவும், முன்னோ டியாகவும் இந்த 2 நாள் மாநாடு நடந்துள்ளது. இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக் களை மத்திய, மாநில அரசுகள் மற்றும் அனைத்து நீதிமன்றங் களும் பின்பற்றவேண்டும். இந்த முயற்சியை மேற் கொண்ட புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி தலைமை தாங்கி பேசியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப் பதில் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. இதற்காக காவல் துறை தலைவர் டிஜிபி சுனில் குமார் கவுதமை பாராட்டு கிறேன். புதுச்சேரியில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி பல்வேறு துறைகளின் நாட்டில் முன்னோடியாக உள்ளது. புதுச் சேரியில் உள்ள மத்திய பல் கலைக்கழகமும் சிறந்து விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை டி.ஜி.பி, சுனில்குமார் கவுதம், இந்திய அரசு சட்ட ஆணைய உறுப்பினர் நீதிபதி ரவிஆர்.திரிபாதி, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் பேராசிரி யர் தரணிக்கரசு, சட்டக்கலை முனைவர் சுபலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner