எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லூதியானா, மார்ச் 6- பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட் சிக்கு நடந்த தேர்தலில் மாநி லத்தை ஆளும் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,  காங் கிரசு கட்சி பஞ்சாப் மாநில முதல மைச்சரை தனது முதலமைச் சராகக் கருத கூடாது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனிப்பட்ட ராணுவ வீரன் போல் செயல் பட்டு தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறியிருந்தார். பஞ்சாப்பை பொறுத்தவரை, அதன் முதல்வர் அமரீந்தர் சிங்கை காங்கிரசும் நம்மவர் என்று நினைக்காது, அதுபோல், காங்கிரசை நம் கட்சி என்று அமரீந்தர் சிங்கும் நினைக்க மாட்டார். அவர் ஒரு சுதந்திர மான வீரர் என கூறினார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அம்ரீந்தர் சிங்,  காங்கிரசு தலைமைக்கும் தனக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பிரதமர் முயற்சிப் பதாக குற்றம்சாட்டினார். சர்ச் சைக்குரிய கருத்துக்களை வெளி யிட்டு தனக்கும் தனது கட்சி யான காங்கிரசு தலைமைக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிகள் வீணாகவே முடியும் என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner