எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அய்தராபாத், மார்ச் 6-  “மதச் சார்பற்ற கட்சிகள் தேர்தல் உடன்பாட்டுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது’’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். நடந்து முடிந்த 3 மாநில சட் டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அய்தராபாதில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் களத்தில் பாஜக போன்ற மத வாத சக்திகளை நாம் எதிர் கொண்டுள்ளோம். இந்த நேரத் திலும் மதச்சார்பற்ற கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டால் எந்தப் பலனும் கிடைக்காது. எனவே, மதவாத, பாசிச சக்தி களை எதிர்கொள்வதற்கு குறைந்த பட்ச உடன்பாட்டுடன் மதச் சார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களில் நிகழாண்டு இறுதி யில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரசு கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றும். காங்கிரசு அல்லாத பாரதத்தை உருவாக்கப் போவ தாக பாஜக கூறி வருகிறது. அப்படிப்பட்ட நிலை ஒரு போதும் உருவாகாது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசு கட்சி யின் ஆட்சி நடைபெற்று வரு கிறது. ராஜஸ்தானில் 2 மக்க ளவைத் தொகுதிகளுக்கும், ஒரு பேரவைத் தொகுதிக்கும் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட காங்கி ரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, கூடுதலாக விதிக்கப்பட்டிருந்த சரக்கு-சேவை வரியைக் குறைத்து, அந்த மாநில மக்களின் வாக்கு களை பாஜக பெற்றது.

திரிபுராவில் 25 ஆண்டு களாக ஆட்சியில் இருந்த இடது சாரி முன்னணி தோல்வி அடைந் துள்ளது. ஜனநாயகத்தில் எது வும் நடக்கலாம். இடதுசாரிக ளும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என் றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner