எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, மார்ச் 8 பீகார் மாநில சட்டமன்ற ஆளும் கட்சியின் துணைத் தலைவர் ரஜாக், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

தற்பொழுதுள்ள அரசியல் சூழலில் அதிகாரம் பெற்று வரும் மனுவாதிகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் போராட முன்வர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை இழிவுபடுத்திட வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட வேண்டும் என மனுவாதிகள் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை தேசப்படுத்தப்பட்டதற்கும், பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருவதற்கும் இத்தகைய சதிச் செயல்களே அடிப்படையாகும்.

ஏற்றத் தாழ்வினை காப்பாற்றப் போராடிவரும் மனுவாதிகளின் செயல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய செயல்களால் நம்மை அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது. மாறாக பெரியார் சிலையினை சேதப்படுத்திடும் செயல்கள் நமது உரிமைக்காக நமது இறுதி மூச்சு உள்ளவரை போராடும் வலிமையினை நமக்குத் தரும்.

இவ்வாறு பீகார் மாநில ஆளும் கட்சியான ஜனதளம் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர் ரஜாக் செய்தி விடுத்துள்ளார்.