எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, மார்ச் 12  சிறுபான்மையினர் மேம் பாட்டு கழகம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கி பேசியதாவது:-

சரக்கு ஆட்டோ உள்பட பல்வேறு வாடகை வாகனங் களை வாங்க சிறுபான்மையினருக்கு ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பணம் வங்கி மூலம் கடன் வழங்க அரசு உதவி செய்கிறது. சிறுபான்மையின ரிடம் வேலையின்மை அதிக மாக உள்ளது. அவர்களும் பொருளாதாரத்தில் முன்னேற் றம் அடைய அரசு உதவிகளை வழங்குகிறது. முதல் முறை யாக 500 பேருக்கு அரசின் உதவிகள் வழங்கப்படுகின்றன.

தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். இதன் மூலம் சமத் துவ சமுதாயம் உருவாக வேண் டும். இது அரசியல் சாசனத்தின் விருப்பம் ஆகும். இந்த பணி களை செய்வது அரசின் கடமை ஆகும். சமத் துவம் வேண்டாம், ஏற்றத்தாழ்வுகள் தொடர வேண் டும் என்று நினைப்பவர்கள் அரசியல் சாசனத்தை மாற்று வதாக கூறுகிறார்கள்.

மூடநம்பிக்கைகள் மூலம் மக்கள் எளிதாக ஏமாற்றப்படு கிறார்கள். கல்வி கற்று முன் னேற்றம் அடைந்தால் அவர் களை ஏமாற்ற முடியாது. வரும் நாட்களில் இன்னும் அதிக நபர்களுக்கு அரசின் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner