சூரத், ஏப்.16 குஜராத்தின் சூரத் நகரில் 11 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டுள் ளார். அவரது உடலில் 86 இடங் களில் காயங்கள் இருந்தன.
சூரத் நகரின் பெஸ்தான் பகுதி கிரிக்கெட் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சூரத் நகர காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும் அவரது உட லில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து பிரேத பரி சோதனை நடத்திய டாக்டர் கணேஷ் கோவக்கர் கூறிய போது, சுமார் ஒரு வாரம் வரை அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, சிறுமியின் உள் உறுப்புகள் சேதமடைந்துள் ளன. டில்லி மருத்துவ துணை மாணவி போன்று இந்த சிறு மியும் கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டிருக் கிறார் என்று தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுமி யார் என்பது தெரியவில்லை. அவரை குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.20,000 பரிசு வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித் துள்ளனர். சூரத் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1,200 சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள் ளன. சமூக வலைதளங்களிலும் உதவி கோரப்பட்டுள்ளது.
சூரத் நகர போலீஸ் ஆணை யர் கூறியபோது, ஒடிசா, மேற்கு வங்கம் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். காணாமல் போன 8,000 குழந்தைகளின் விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். உயிரிழந்த சிறுமியின் டிஎன்ஏ எடுக்கப் பட்டு ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது என்று தெரிவித் தார்.
உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் வேகமாக நடந்து வரு கின்றன.