எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு:

பெங்களூரு, மே 17- முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருநாடக சட்டசபை வளாகத்தில் காந்தி சிலை முன் அமர்ந்து காங்கிரசு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கருநாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மஜத தலைவர் குமாராசாமி பங்கேற்றுள்ளனர்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

கருநாடகா தேர்தல் முடிவுகள் கடந்த 15 ஆம் தேதி வெளியாகியது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரசு,-மஜத இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்நிலையில் தாங்கள் தனிபெரும்பான்மை பெற்றுள்ளோம். எனவே, தங்களையே ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உரிமை கோரினார்.

இரவு ஒரு மணியில்...

இந்நிலையில், ஆளுநர் எடியூரப்பாவை இன்று (17.5.2018) பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசு கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரவு ஒரு மணி யில் நடைபெற்ற விசாரணை விடிய விடிய நடைபெற்றது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் எடியூரப்பா பதவி ஏற்க தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக் கின் விசாரணையை 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பாவை அழைத்து ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கருநாடக சட்டசபை வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner