எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக அல்லாத மாநிலங்களின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கடிதம்

புதுடில்லி, மே 18 புதுச்சேரி, டில்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர் மற்றும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களின்  நிதியமைச்சர்கள் இணைந்து  குடியரசுத் தலைவருக்கு மனு கொடுத் துள்ளனர்.

15ஆவது நிதிக்குழு அளித்த புதிய பரிந்துரைகளின்படி அல்லாமல், மாநி லங்களுக்கு நிதி ஒதுக்கீடுசெய்வதில் பழைய முறையையே பின்பற்றிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட் டுள்து.

புதுவை முதல்வர் வே.நாராயண சாமி, டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, கேரள மாநில நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஈசாக், பஞ்சாப் மாநில நிதியமைச்சர் மன்பிரீத் பாதல், ஆந்திரப்பிரதேச மாநில நிதியமைச்சர் யனாமல் ராம கிருஷ்ணுடு உள்ளிட்டவர்கள் அம்மனு வில் கையொப்பமிட்டுள்ளனர்.

மத்திய அரசின் 15ஆவது நிதிக் குழுவின் புதிய பரிந்துரை அரசமைப் புக்கு எதிரானது. சீராக உள்ள நிதி நிர்வாகத்தை சீர்குலைப்பது, இது போன்ற மாறுதல்கள் தொழில்நுட்பரீதியிலும்  தவறானவையாக உள்ளன. மாநில அரசுகள் சுதந்திரமாக இலக்கு நிர்ணயித்து அவற்றை எட்டுதற்கு தடையாகவும் மற்றும் அரசமைப்பின் வரையறைகளை மீறுவதாகவும், கூட் டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட 14ஆ-வது நிதி ஆணையத் தின் பரிந்துரைகள் 2020ஆம் ஆண்டோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு 15ஆ-வது நிதி ஆணையக் குழுவை சில மாதங்களுக்கு முன் அமைத் தது. இந்த ஆணையத்தின் தலைவராக வி.கே.சிங் நியமனம் செய்யப்பட்டார்.

அதன்படி, அந்தக் குழு கொடுத் துள்ள பரிந்துரைகள் 2020இல் இருந்து 2025ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 15-ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரையில், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டை வைத்து நிதி ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட் டிருந்தது. இதற்கு தென்மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக் கினால், குறைந்த அளவே நிதி கிடைக் கும் என கூறிய தென்மாநில நிதிய மைச்சர்கள் அண்மையில் திருவனந்த புரத்தில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதைக் கைவிட வேண்டும் என்றும், 15ஆவது நிதி ஆணையக்குழுவின் புதிய பரிந்துரையின்படி 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நிதியை ஒதுக்குவது என்பது மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்ப தாகவும்,  அரசமைப்புக்கு விரோதமான தாகவும், மாநில சுயாட்சியை பாதிக்கச் செய்வதாகவும் இருக்கும் என்றும்  குடியரசுத் தலைவரிடம் அளித்த மனு வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner