எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத்தில் ஆட்சி  அமைப்பு : அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை அரசியல் விதிகளின்படி நடைபெற்றுள்ளது

மும்பை, மே 19 கருநா டகத்தில் ஆட்சி அமைக்க எடி யூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற வில்லை. அரசியல் விதிகளின் படி நடைபெற்றுள்ளது.

மத்தியிலும் மகாராஷ்டிரத் திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடி வருகிறது.

இந்நிலையில், கருநாடகத் தில் பெரும்பான்மை பலம் பெற்ற காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு பதி லாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆளு நர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த விவகாரத்தை முன் வைத்து பாஜகவை சிவசேனை கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி யின் அதிகாரப்பூர்வ நாளே டான 'சாம்னா'வில் வெள்ளிக் கிழமை வெளியான தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கருநாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, அரசமைப்புச் சட்ட விதிகளின் படி நடைபெறவில்லை. 'அரசி யல்' விதிகளின்படி நடை பெற்றுள்ளது.

கருநாடக ஆளுநராக உள்ள வஜுபாய் வாலா, பாஜகவின் உண்மையான தொண்டர். குஜராத் அமைச்சரவையில் 14 ஆண்டுகள் பதவி வகித்தவர். பிரதமர் மோடியால் தான் அவர் கருநாடக ஆளுநராக ஆக்கப்பட்டார். எனவே, கரு நாடகத்தில் அவர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருக் கிறார். அவர், காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்திருந்தால்தான் வியப் பாக இருந்திருக்கும்.

இந்த விவகாரத்தில், நீதித் துறையோ, ஆளுநரோ சட்ட விதிகளை பின்பற்றவில்லை. அதனால்தான், 116 எம்எல்ஏக் களின் கையெழுத்துகளுடன் காங்கிரஸ் - மஜத கூட்டணி சமர்ப்பித்த கடிதம் நிராகரிக்கப் பட்டு, பாஜகவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

கோவா, மணிப்பூரில் ஒரு விதமாகவும் கருநாடகத்தில் வேறுவிதமாகவும் விதி முறை கள் பின்பற்றப்படுவது ஏன்? நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஆட்சியை கைப்பற் றுவதே பாஜகவின் புதிய கொள்கையாக உள்ளது.

காங்கிரஸுக்கு மாற்றாகத் தான் மக்கள் பாஜகவுக்கு வாக் களித்தனர். ஆனால், காங்கிரஸ் போலவே பாஜகவும் மாறிவிட்டது. அப்படியென்றால், பாஜக ஆட்சிக்கு வருவதில் என்ன பயன்? என்று சிவ சேனை கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், கருநாடக தேர்தல் பிரசாரத்தின்போது சித்தரா மையா என்று குறிப்பிடுவதற்கு பதிலாக எடியூரப்பாவின் ஆட் சிக்கே ஊழலில் முதலிடம் என்று பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா வாய் தவறி கூறியதையும் சிவசேனை சுட்டிக் காட்டிள்ளது.

'வாய் தவறி கூறினாலும் அது உண்மைதான். எடியூரப் பாவால்தான் பாஜக இப்படிப் பட்ட சூழலை எதிர்கொண் டுள்ளது' என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner