எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 20 முதல்வர்  பதவியை எடியூரப்பா பதவி விலகல் செய்த பிறகு சித்த ராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

கருநாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா முதல்-வர் பதவியை விலகல் செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த போதும் ஆளுநர் வஜூபாய் வாலா, பாரதீய ஜனதா ஆட் சிக்கு அனுமதி வழங்கினார். இது ஜனநாயக படுகொலை ஆகும்.

ஜனநாயகத்தில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்க வேண் டும். பாரதீய ஜனதாவுக்கு முழு பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. ஆனால் பிர தமர் மோடி, அமித்ஷா ஆகி யோர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்டனர். பெரும் பான்மையை நிரூபிக்க 7 நாட் கள் வேண்டும் என்று எடி யூரப்பா கேட்டார். ஆனால் ஆளுநரோ அதற்கு 15 நாட்கள் கொடுத்தார். குதிரை பேரத்தை நடத்தவே இந்த நீண்ட அவகாசத்தை ஆளுநர் வழங் கினார். உச்சநீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட்டது. இதனால் ஜனநாயகம் காக்கப் பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த விவ காரத்தின் பின்னணியில் மோடி உள்ளார். கருநாடகத்தில் எக்கா ரணம் கொண்டும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை அமைக்க விட மாட் டோம் என்று மோடி பகிரங் கமாக கூறினார். மோடி ஹிட் லரை போல் செயல்படுகிறார். அமித்ஷாவும் அவ்வாறே நடந்து கொள்கிறார். மதவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும்.

குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கி றோம். புதிய அமைச்சர்கள் குறித்து நாங்கள் இரண்டு கட்சி களின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner