எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- பிரகாஷ் ராஜ்

பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார்.

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில்  கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: ''கருநாடக மாநிலம் இனி காவிமய மாகாது. ஆனால், வண்ண மயமாக இருக்கும். மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டதே. 55 மணிநேரம் நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை பாஜக அரசு. நகைச்சுவை ஒருபக்கம் இருந்தாலும், கருநாடக மக்களே இனிமேல் சேற்றை வாரி இறைக்கும் அரசியலைப் பார்க்கத் தயாராக இருங்கள். நான் தொடர்ந்து மக்களின் பக்கமே இருப்பேன், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்.''

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner