எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி உரிமை கோரியுள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைத்து ஆட்சி செய்து வருகிறது.

கோவாவில் சட்டப்பேரவைக் காங்கிரசு கட்சித் தலைவர் சந்திர காந்த் காவ்லேகர் தலைமையில், ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் வழங்கினர். மணிப்பூரில் சட்டப்பேரவை காங்கிரசு தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓக்ராம் இபோபி சிங் தலைமையில், ஆளுநர் (பொறுப்பு) ஜகதீஷ் முகியை சந்தித்து கடிதம் அளித்தனர்.

இதுகுறித்து மணிப்பூர் காங்கிரசு செய்தித் தொடர் பாளர் ஜெய்கிசான் சிங் கூறுகையில், ‘’இபோபி சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் 9 பேர், வெள்ளிக்கிழமை நண்பகலில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்’’ என்று தெரிவித்தார்.

கோவாவில், மொத்தமுள்ள 16 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 14 பேர், சந்திரகாந்த் காவ்லேகர் தலைமையில் சென்று ஆளுநரை சந்தித் தனர். மீதமுள்ள இருவரில் ஒரு எம்எல்ஏ வெளிநாடு சென் றுள்ளார். மற்றொருவர் மருத்துவ மனையில் உள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் சந்திரகாந்த் காவ்லேகர் பேசுகையில், தங் களது கடிதம் குறித்து முடி வெடுக்க ஆளுநருக்கு 7 நாள் அவகாசம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கருநாடக அரசி யலை முன் மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கோவா ஆளுநரிடம் கோரிக்கை வைத் துள்ளோம். கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெரும்பான்மை இல்லாத பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்த தவறை திருத் திக் கொள்ளுமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம்.

எங்களிடம் அரசு அமைப் பதற்கு தேவையான பலம் உள் ளது. சட்டப்பேரவையில் நாங்கள் அதை நிரூபிப்போம். பாஜக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங் காமலேயே, பெரும்பான்மைக்கு தேவையான 21 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் வசம் உள்ளனர் என்றார் அவர்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசு 17 இடங் களில் வென்றது. அதற்கு அடுத்த தாக, 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதர வுடன் ஆட்சி அமைத்தது.

இதன் பிறகு, காங்கிரசு எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்து, பின்னர் இடைத்தேர்த லிலும் வெற்றி பெற்றார்.

மணிப்பூர்

மணிப்பூர் சட்டப்பேரவை யில் மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.

அங்கும் 21 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் வந்த பாஜக, பிற கட்சிகளுடன் இணைந்து கூட் டணி அரசை அமைத்து ஆட்சி செய்து வருகிறது.

பீகாரில் உரிமை கோரியது லாலு கட்சி

பீகார் மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக் குமாறு அழைப்பு விடுக்க வேண் டும் என்று அவரது மகனும், சட்டப்பேரவைக் கட்சித் தலை வருமான தேஜஸ்வி யாதவ் ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

காங்கிரஸ், ஹிந்துஸ்தானி அவாமி மோர்சா, சிபிஅய் (எம்எல்) ஆகிய கட்சிகளின் தலை வர்களும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, தேஜஸ்வி யாதவ் ஆளுநரை சந்தித்த போது உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து சட்டப்பேரவையில் தங்களுக்கு 111 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும், பெரும்பான் மையை நிரூபிக்க கோரி வாக்கெ டுப்பு நடத்தப்பட்டால் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

கருநாடகத்தில் தனிப்பெரும் கட்சியான பாஜக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தது சரியெனில், அதே வழி முறையை பீகாரிலும் பின்பற்ற லாம் என்று தேஜஸ்வி கூறினார்.

பீகாரில் முதலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசு கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதீஷ் குமார் ஆட்சி அமைத்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்ட அவர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை நிறுவி ஆட்சி செய்து வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner