எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 21 அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கருநாடக ஆளுநர் வஜுபாய் வாலா உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி 2 நாளில் முடிவுக்கு வந்ததால், காங்கிரசு ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி, வரும் புதன்கிழமை(மே 23) ஆட்சியமைக்கிறார்.

இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கருநாடக ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் காங்கிரசு தலைவர்கள் பலரும் வலியுறுத்தி யுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner