எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்எஸ்எஸ் தேர்வு செய்பவர்களை அதிகாரிகளாக்க பிரதமர் முயற்சி: ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி, மே 23- ஆர்எஸ்எஸ் அமைப்பு தேர்வு செய்யும் நபர் களை அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந் திர மோடி முயற்சித்து வருவ தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நிலை மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை களில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சியில் எவ் வாறு ஒருவர் செயல்படுகிறார் என்பதைப் பொருத்து அவரை அய்ஏஎஸ்-ஆக நியமிக்கலாமா? அல்லது வேறு பணி நிலையில் நியமிக்கலாமா? எனத் தீர்மா னிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண் டனம் தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் கூறியிருப் பதாவது:

ஆர்எஸ்எஸ் தேர்வு செய்யும் நபர்களை அய்ஏஎஸ், அய் பிஎஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகும், தங்களுடன் இணக்கமாக செயல்படுபவர் களை மட்டுமே உயர் பொறுப் புகளை நியமிக்க பாஜக அரசு சதி செய்து வருகிறது. மாண வர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெ னில், மாணவர்களின் எதிர்கா லத்தையே அழிக்கும் நடவ டிக்கை. மாணவர்கள் மதிப் பெண்கள் அடிப்படையில்தான் பதவிக்கு நியமிக்கப்பட வேண் டும். அப்போதுதான் திறமைக்கு உரிய மதிப்பு இருக்கும். அதை விடுத்து, பயிற்சியில் அவர்க ளைக் கண்காணிப்பது என்பது முற்றிலும் தவறான செயல்பாடு என்று ராகுல் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner