எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரொக்கப் பணத்திற்கான தேவை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது

ரிசர்வ் வங்கி தகவல்

புதுடில்லி, மே 24- கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாத நடவடிக்கையை தடுத்தல்; ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகவே உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததாக மோடி காரணம் கூறினார். ஆனால், கறுப்புப் பண பேர்வழிகள் தங்களின் பணத்தை சிந்தாமல் சிதறாமல் வெள்ளையாக்கிக் கொண் டார்கள். கடைசிவரை கறுப்புப் பணம் வெளியே வரவில்லை. புதிய ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்களுக்கு கிடைப் பதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கிடைத்து விட்டது. ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் தாங்கள் சொன்ன படி அதிகரித்துவிட்டதாக மோடி அரசு கூறியது. பணத்தை பறித்து வங்கியில் வைத்துக் கொண்டதால், வேறு வழியின்றி டிஜிட் டல் பரிவர்த்தனையை நாட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டது. இதையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தது என்று மோடிஅரசு கணக்கு காட்டியது. அண்மையில்வங்கி ஏடிஎம்-களில் ஒரு செயற்கை பணத்தட்டுப் பாட்டையும் ஏற்படுத்திப் பார்த்தது. ஆனால், டிஜிட் டல் பரிவர்த்தனையும் தற்போது கானல் நீராகி விட்டது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய மக்களிடையே, ரொக்கப் பணத்துக்கான தேவை 7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியே உண்மையை போட்டு உடைத்துள்ளது.பணமதிப்பு நீக்க அறிவிப்பின் போது, 2016 நவம்பர் மாதம் மக்களுக்கான ரொக்கப் பணத்தின் தேவை ரூ. 17 லட்சம் கோடியாக இருந்தது; ஆனால், இது 2018 ஏப்ரல் மாதத்தில் ரூ. 18 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது; அதாவது மக்களின் பணத்துக்கான தேவை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் ஜன்தன் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக வங்கிக்கு செல்லும் நிர்ப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் 38 சதவிகித வங்கிக் கணக்குகள் செயல்படாமலேயே இருப்பதாக வும் ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner