எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவுக்கு 145ஆவது இடம்

புதுடில்லி, மே 24 சர்வதேச அளவில் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 145ஆவது இடம் கிடைத்தது. இந்தியாவை விட சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

இதுகுறித்து 195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நாடுகள் பட்டியலில், அய்ஸ்லாந்து, நார்வே, நெதர் லாந்து, லக்ஸர்ம்பர்க், பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. சோமாலியா, சார், கினியா ஆகிய நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன.

இப்பட்டியலில் இந்தியாவுக்கு 145ஆவது இடமே கிடைத்தது. அண்டை நாடுகளான சீனா(48), இலங்கை(71), வங்க தேசம்(133), பூடான்(134) ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. இப்பட்டியலில் பாகிஸ்தான் 154, நேபாளம் 149, மற்றும் ஆப்கானிஸ்தான் 191ஆவது இடம் வகிக்கின்றன.

இந்தியாவில் கேரளா, கோவை மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படுவதாகவும், அசாம் மற்றும் உ.பி.,யில் மருத்துவ வசதி மோசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவத்துறைக்கு, இதயநோய், பக்க வாதம், சிறுநீரக பிரச்சினை, கேன்சர் ஆகியவை பெரும் சவாலாக விளங்குவதாகவும், இந்நோய்களை தீர்ப்பதில் இந்தியா தடு மாற்றத்துடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner