எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நைனிடால், மே 26 இந் துத்துவா வெறிக் கூட்டத்திட மிருந்து, இஸ்லாமிய இளைஞர் ஒருவரை, சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி காப்பாற்றியிருப்பது, உணர்ச்சி கரமான நிகழ்வாக மாறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் நகரில் உள்ள கோயிலுக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த தனது காதலி விடுத்த அழைப்பின்பேரில், அந்த இஸ் லாமிய இளைஞர் கோயிலுக்கு வந்து, காதலிக்காக காத்திருந் துள்ளார்.

பின்னர் தனது காதலி வந்த தும் அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, காத லர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்ட இந்துத்துவா மதவெறிக் கும்பல், அந்த இளைஞர் இஸ்லாமியர் என்பதை அறிந்து தாக்கத் துவங்கியுள்ளது.

இதனைக் கவனித்துவிட்ட- அங்கு கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ககன்தீப் சிங், வேகமாக விரைந்து வந்து அந்த இஸ்லாமிய இளைஞரை, தாக்கு தலிலிருந்து தடுத்து, வெறிக் கும்பலிடமிருந்து பத்திரமாக மீட்டுள்ளார். இந்த நிகழ்வு வீடியோ பதிவாக சமூகவலைத் தளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, ஒரு இஸ் லாமிய இளைஞரை, இந்துத்துவ வெறிக்கும்பலிடமிருந்து பாது காத்த நிகழ்வும் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங்கிற்கு பலர் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner