எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, மே 26- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது தூத்துக்குடி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், 13 உயிர் களை பறித்த தூத்துக்குடி துப் பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப் பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமி ழக அரசு மற்றும் காவல்துறை யினரின் காட்டுமிராண்டித்தனத் துக்கு எதிரான முழக்கங்களுடன் ஏராளமான ஆண்களும், பெண் களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், இந்த சம்பவத் துக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் இலங்கை தொழிலாளர்கள் அய்க்கிய கூட்டமைப்பை சேந் தவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தலைமை தூதருக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

17 வயது இளம்பெண் உள் பட 13 பேர் காவல்துறை துப் பாக்கிச் சூட்டில் கொல்லப்பட் டதற்கு தங்களது எதிர்ப்பை தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி மற்றும் இந் திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் பதிவு செய்யு மாறு அந்த கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner