எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, மே 27 மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் நடைபெற்ற நான்கு ஆண்டுகால ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளிடையே மாயாவதி சனிக்கிழமை (26.5.2018) உரை யாடினார். அப்போது அவர் பேசியதாவது:

இன்றைக்கு மோடி அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஏழைகள், தொழி லாளர்கள், பொது மக்கள், பெண்கள் என அனைவரும் மத்திய அரசின் கீழ் இந்த அளவுக்கு சுரண்டப்பட்டதை இதற்கு முன்னர் கேள்விபட்ட தில்லை.

மக்களுக்கு அளித்த வாக் குறுதிகளை பாஜகவும், மோடி யும் நிறைவேற்றவில்லை என் பதே, அரசின் மீதான நம்பிக் கையும், ஆர்வமும் குறைந்து போவதற்கான காரணம். பாஜக தலைவர்கள் சொல் வதை சொந் தக் கட்சிக்காரர்களே கேட்ப தில்லை. மோடி அரசுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதற்கான சாட்சி தான் இது.

தேசிய ஜனநாயகக் கூட்ட ணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் ஒன்றன், பின் ஒன்றாக வெளியேறி வருகின்றனர். பாஜக அரசு வெற்றி பெற வில்லை என்பதையும், அனைத்து நிலைகளிலும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்பதையுமே இது உணர்த்துகிறது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததன் விளைவாக முதலீட்டாளர்களிடம் அரசு தலைகுனிந்து நிற்கிறது. பொது மக்கள் தங்கள் பணம் வங்கி களில் பாதுகாப்பாக இருக்கிறதா, இல்லையா என கவலை அடைந்துள்ளனர்.

அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடு படலாம் என தங்கள் கட்சியினருக்கு பாஜக அனுமதி அளித்துள்ளதைப் போல இருக் கிறது. பாஜக என்றாலே அது காட்டாட்சி தான் என்றார் மாயாவதி.