எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், மே.27 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி 100 நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி  போராட்டக்காரர்கள் பெருந்திரளாகச் சென்றபோது, காவல்துறையினரின் துப் பாக்கிச் சூடு எவ்வித எச்சரிக்கையுமின்றி நடத்தப்பட்டது. குருவி சுடுவதைப் போல, மக்களைக் கொன்று குவிப்பதற் கான துப்பாக்கிச் சூடாக குறிவைத்து நடத்தப்பட்டு 13 உயிர்களுக்கும் மேலாக பலியான அவலம் தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் லண்டனிலும் கண்டனப்போராட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை நடத் துகின்ற நிறுவனமான வேதாந்தா நிறு வனத்துக்கு எதிராக தற்போது இங்கி லாந்து தொழிலாளர் கட்சி களம் இறங்கியுள்ளது.

தொழிலாளர்கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்டோன்னல் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் வேதாந்தாவுக்கு எதிராக, கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் கொல்லப் பட்டது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

வேதாந்தா நிறுவனம் அணிந்துள்ள முகமூடியை அகற்றும் வண்ணம் லண் டன் பங்குசந்தை பட்டிய லிலிருந்து அதனை நீக்க வேண்டும் என்று தொழி லாளர் கட்சி கூறியுள்ளது.

மேலும், ஜான் மெக்டோன்னல் கூறியதாவது:

“இந்த வாரத்தில் போராட்டக்கா ரர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளதைத் தொடர்ந்து, லண்டன் பங்கு சந்தை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த மாபெரும் பன்னாட்டு நிறுவனம் மக்களை தங்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு சட்ட விரோத கனிம தொழிற்சாலையை பல ஆண்டு களாக இயக்கி வந்துள்ளது. இந்தியா, ஜாம்பியா மற்றும் பன்னாட்டளவில்  வேதாந்தா நிறுவனத்தின் மனித உரிமைகள் மீறல் மற்றும் சூழலியல் கெடுத்து வருவது குறித்து, பன்னாட்டு பொது மன் னிப்பு அவை போன்ற தொண்டு நிறுவனங்கள் பரப்புரை செய்து வந் துள்ளன’’ என்றார்.

மெக்டோன்னல் நாடா ளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக 2015ஆவது ஆண் டிலேயே  கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

2009ஆம் ஆண்டில் உலைக்கூடம் சிதைந்ததால் 40 பேர் உயிரிழந்தது குறித்து நாடாளுமன்றத்தில் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். நீதித்துறை அறிக்கையில் அந்நிறுவனத்தின் நட வடிக்கைகளை அடக்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியானது.    அவ்வ றிக்கையில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சி தலை வர் ஜெரேமி காபின் கையொப்ப மிட்டிருந்தார்.

லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் வேதாந்தாவை தடை செய்  எனும் முழக்கத்துடன் போராட்டம் நடத்தி னார்கள்.

வேதாந்தாவை தடை கோரும் இயக்கத்தின் சார்பில் சமரேந்திர தாஸ் கூறியதாவது: “அமைதியான அறவழி போராட்டத்தை நடத்தியவர்கள்மீது கார்ப்பரேட் படுகொலை நடத்தப்பட் டது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இங்கிலாந்து வாழ் தமிழர்கள் அமைப்பின் கார்த்திக் கமலக்கண்ணன் கூறியதாவது:

“சுவாசிப்பதற்கு பாதுகாப்பான காற்று வேண்டும், பாதுகாப்பான குடி நீர் வேண்டும் என்பதற்காக மனிதர் களின் கதறல்களைவிட பிரிட்டிஷ் நிறு வனம் தங்களின் லாபத்தை பெரியதாக  கொண்டுள்ளது மிகவும் அருவருக்கத் தக்கதாகும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner