எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'தி டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் புள்ளிவிவரம்

மக்களுக்கு பெரிதும் சுமையின்றி பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்து வழங்க முடியும் என்பது குறித்து தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு விளக்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வது என்பது நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது. 2013ஆம் ஆண்டிலிருந்ததைவிட மிக அதிக விலையை பெட்ரோல், டீசல் எட்டியுள்ளது.

எப்போதுமில்லாத அளவுக்கு டில்லியில் ரூ.76.57, மும்பையில் ரூ.84.40 விலையேற்ற மடைந்துள்ளது.

பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது ஏன்?

அமெரிக்கா அணு விவகாரத்தில் ஈரானுடன் கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் ஏற்றுமதியாளர்களால்  உற்பத்தி நிறுத்தப்படுகிறது. வெனிசுலா மற்றும் ஈரானிலிருந்து பெறப்படுகின்ற கச்சா எண்ணெய் வரத்து சரிகிறது. அதனால், பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.

பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் பெட்ரோல், டீசல் விலையேற் றத்துக்கு காரணம் என்று அரசுகள் கூறினாலும், கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76அய் எட்டியது. வரி விதிப்புகளுக்கு முன்பாகவே 40 விழுக்காட்டளவில் விலை அதிகமாக இருந்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் எரிபொருள் களின் விலை அதிகப்படியான வரிவிதிப்பு களின் காரணமாக  பெட்ரோலின் விலையில் இரு மடங்காகவும், டீசல் விலையில்  மும்மடங்காகவும் உயர்ந்துள்ளது.

2016-2017இல் பெட்ரோலியப் பொருள் களின் மீதான வரிவிதிப்புகளின்மூலமாக மத்திய அரசு ரூ.2.7 லட்சம் கோடி தொகையை சுங்கக்கட்டணம் மற்றும் வரியாகப் பெற்றுள்ளது. இது 2014_15ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது பெற்ற வருவாய் அளவான ரூ.1.3 லட்சம் கோடியை விட 117 விழுக்காடு அதிகமாகும்.

வரி விதிக்கப்படுவது எப்படி?

பெட்ரோல், டீசலுக்கு நாம் செலுத்தும் தொகையில் சரிபாதி அளவில் வரியாக கணக்கிடப்படுகிறது. எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விலைக்குறைப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார். கடந்த 20.5.2018 அன்று அவர் கூறுகையில், எரிபொருள் விலையேற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் உணர்வுப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளது. அதற்கான பல்வேறு மாற்றுவழிகள்குறித்து ஆராய்ந்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறு:ம என்று நம்புகிறேன் என்றார்.

எரிபொருள்கள் விலையேற்றத்தக்கு பெரிதும் காரணமாக அரசு விதிக்கின்ற வரியே காரணமாக உள்ளது. 2014ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2016 ஜனவரி வரை மத்திய அரசால் எரிபொருள்கள்மீதான சுங்க வரி ஒன்பது முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாத்தில் மட்டும் ஒரேயொரு முறை வரிக் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வரிவிதிப்புகளுக்கு முன் மிகக் குறைந்த விலை

வரி விதிப்புகளாலேயே விலையேற்றம்

16.9.2013 அன்று முகவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.52.15. மத்திய அரசு வரி விதிப்பு ரூ.9.48, மாநில அரசு வரிவிதிப்பு ரூ.12.68, முகவர்களுக்கான கமிஷன் ரூ.1.79 ஆக மொத்தம் அன்றைய சந்தை விலை ரூ.76.10

21.5.2018 அன்று முகவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.37.22. மத்திய அரசு வரி விதிப்பு ரூ.19.48, மாநில அரசு வரிவிதிப்பு ரூ.16.29, முகவர்களுக்கான கமிஷன் ரூ.3.62 ஆக மொத்தம் சந்தை விலை ரூ.76.61.

5ஆண்டுகளில் லிட்டருக்கு 29 விழுக்காடு

விலை குறைந்தும் விலை யேற்றம் ஏன்?

ஆக, பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதன் முகவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.37.22ஆக இருக் கின்றது. அதாவது அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட 29 விழுக்காடு விலை குறைந்துவிட்டது. ஆனால் மத்திய அரசின் வரி விதிப்பு 105விழுக்காடாகவும், மாநில அரசின் வரிவிதிப்பில் 28 விழுக்காடாகவும், முகவர்களுக்கான கமிஷன் 102 விழுக்காடாகவும் அதிகரித்துவிட்டதால், அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சந்தை மதிப்பைவிட கூடுதலாகவே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது.

1.10.2013 அன்று முகவர்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.41.80. மத்திய அரசு வரி விதிப்பு ரூ.3.56, மாநில அரசு வரிவிதிப்பு ரூ.6.09, முகவர்களுக்கான கமிஷன் ரூ.1.09 ஆக மொத்தம் அன்றைய சந்தை விலை ரூ.52.54.

21.5.2018 அன்று முகவர்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.40.02. மத்திய அரசு வரி விதிப்பு ரூ.15.33, மாநில அரசு வரிவிதிப்பு ரூ.9.99, முகவர்களுக்கான கமிஷன் ரூ.2.52 ஆக மொத்தம் சந்தை விலை ரூ.67.86

இரு மடங்காக உயர்த்தப்பட்ட

மத்திய அரசின் சுங்க கட்டணம், வரிவிதிப்பு

டில்லி விலை நிலவரங்களின்படி, பெட்ரோலியத்துறையில் மத்திய அரசுக்கு 2014-2015ஆம் ஆண்டில் ரூ.1.3 லட்சம் கோடி இருந்த நிலையில், வரிவிதிப்புகளுக்குப் பின்னர் ரூ.2.7 லட்சம் கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது. மாநில அரசுக்கு 2014-2015ஆம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடி இருந்த நிலையில், வரிவிதிப்புகளுக்குப்பின்னர் ரூ.1.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.36.22இன் மீது சந்தை மதிப்பின்மீது (48.10 விழுக்காடு), சுங்க வரி ரூ.19.48 (25.9 விழுக்காடு), வாட் வரி ரூ.16.01 (21.3 விழுக்காடு), முகவர் கமிஷன் ரூ.3.61 (4.8 விழுக்காடு) ஆக சுமையேற்றி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.75.32 ஆக சந்தையில் விலை ஏற்றத்துடன் அளிக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.39.11இன் மீது சந்தை மதிப்பின்மீது (58.6 விழுக்காடு), சுங்க வரி ரூ.15.33 (23.0 விழுக்காடு), வாட் வரி ரூ.9.83 (14.7 விழுக்காடு), முகவர் கமிஷன் ரூ.2.52 (3.8 விழுக்காடு) ஆக சுமையேற்றி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.66.79 ஆக சந்தையில் விலை ஏற்றத்துடன் அளிக்கப் படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner