எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 28 முதல்-அமைச்சர் நாராயணசாமி நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு நேருவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப் போது அவர் பேசியதாவது.

நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து நல்லாட்சி தந்தார். ஆனால் இப்போது மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த திட்டங் களின் பெயர்களை மாற்றி செயல்படுத்து கிறார்கள்.

நான் டில்லி செல்ல விமான பய ணத்துக்கு ரூ.22 லட்சம் செலவு செய்த தாகவும், அமைச்சர்களும் செலவு செய்த தாகவும் கணக்குகூறி வருகிறார்கள். நாங்கள் எங்களது சொந்த வேலைக்காக டில்லிக்கு செல்லவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் உறுப்பினர் நான். இதற்காக பல முறை டில்லி சென்றுள்ளேன். இந்த கவுன்சிலில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தினால் 5 ஆண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதனால் இப்போது இழப் பீடு தருகிறார்கள். இல்லா விட்டால் புதுச்சேரி வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றிருக்கும். நாங்கள் டில்லி செல்வதாக கூறிவிட்டு தாம்பரத்தோடு திரும்பி வரவில்லை. மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வரு கிறோம். அதற்கான ஆதாரங்களும் இருக் கின்றன.

டில்லி சென்று ரூ.2 ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.500 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம், ரூ.44 கோடியில் சாகர்மாலா திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.22 லட்சம்தான் செலவு. ஆனால் மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சரின் அலுவலக தேநீர் செலவு ஓராண்டிற்கு ரூ.3 கோடி. நான் சொந்த வாகனத்திலேயே செல்கிறேன். சொந்த வீட்டில்தான் தங்குகிறேன்.

நமது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் புதுவையில் இருக்கமாட்டேன் என்று கூறினார். அவர் தனது வாக்கினை காப் பாற்றுவார் என்று நினைக்கிறேன். அவரது முட்டுக்கட்டையினால் புதுவை மாநி லத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கோப் புகளை அனுப்பினால் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பு கிறார். அவர் பிரதமர் மோடியின் முகவராக செயல்படுகிறார்.

வருகிற 29-ஆம் தேதி (நாளை) அவர் பெட்டி படுக்கையோடு டில்லிக்கு செல்ல வேண்டும். அதன்பின் புதுச்சேரியில் வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner