எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மே 29 விவசாயிகளின் தொடர் தற்கொலை, மத்திய அரசின் மோசமான விவசாயக் கொள்கை, விவசாயத்தை அயல்நாட்டுப் பண்ணை முதலாளிகளின் கையில் ஒப்படைக்கத் துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை களைக் கண்டித்து மகாராட்டிர விவசாயிகள் மீண்டும் நாடுதழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து நாட்டின் அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்திய வரலாற்றில் விவசாயிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாகக் கருதப்படும் அளவிற்கு மத்திய அரசு நடந்துகொண்டது. தன்னு டைய தவறை மறைக்க விவசாயிகளின் தற்கொலையை மூடிமறைத்து திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகிறது.

மத்திய அரசின் மோசமான விவசாயக் கொள்கைகளைக் கண்டித்து நாசிக்கி லிருந்து மும்பை வரை சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தை லட்சக்கணக்கான விவசாயிகள் நடைபயணமாக மேற் கொண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தி முடித்தனர். மார்ச் முதல்வாரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மத்திய -- மாநில அரசுகளும் செவி சாய்க்கவில்லை. போராட்டத்தை நிறுத்தும் வகையில் பல்வேறு வெற்று வாக்குறுதிகளை அளித்ததோடு நின்று விட்டன. இதனால் மீண்டும்  மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த மகாராட்டிர விவசாயிகள் அமைப்பு முடிவெடுத் துள்ளது.

இம்முறை வெறும் மகாராட்டி ராவோடு நின்றுவிடாமல் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக் கும் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக மகாராட்டிர விவசாயக் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது,  விவசாய துறைக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச்சில் மகாராட்டிர விவசாயிகள் மாபெரும் பேரணியை மேற்கொண்டோம். இதில் லட்சக் கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து நாசிக் முதல் மும்பை வரையிலான 180 கி.மீ தூர பேரணியை நடத்திக் காட்டினர்.

எங்களது இந்த மாபெரும் பேராட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் அப்போது சில வாக்குறுதி களை மட்டும் தந்துவிட்டு மத்திய -மாநில அரசுகள் அமைதியாகி விட்டன. எங்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அவர்களின் நடவடிக்கை இருந்தது. மத்திய அரசு விவசாயக் கொள்கை குறித்த எந்த ஒரு முன்னேற்றமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் மீண்டும் போராட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்கள்.

வேளாண் துறையில் தன்னிறைவு பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் நிறுவனங்கள் விவசாய உற்பத்தியில் இறங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மோடி அரசு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் மத்திய அரசால் நன்மை ஏற்படுவது இல்லை. விவசாய கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குதல், உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும்.  இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8,000 உதவித்தொகையை ஆண்டுதோறும் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராட்டிர விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner