எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 29- தகவல் அறி யும் உரிமைச் சட்ட (ஆர்டிஅய்) வரம்புக்குள் அரசியல் கட்சிகள் வராது என்று தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் 6 தேசிய அரசியல் கட்சிகளும் கொண்டு வரப்படுவதாக மத்திய தகவல் ஆணையம் கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதற்கு முரணாக தேர்தல் ஆணை யம் இவ்வாறு கூறியுள்ளது.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 6 தேசிய கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம் புக்குள் கொண்டு வந்து மத்திய தகவல் ஆணையம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர் வலர் விகார் துர்வே, தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறி யும் சட்டத்தின்கீழ் மனு அளித் திருந்தார். அந்த மனுவில், 6 தேசிய கட்சிகள் மற்றும் சமாஜ் வாதி கட்சியால் வசூலிக்கப் பட்ட நன்கொடைகள் குறித்த விவரங்களை அவர் கோரியிருந் தார். அந்த மனு மீது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப் பதாவது: மனுவில் கோரப் பட்டுள்ள விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இல்லை. இது அரசியல் கட்சிகள் சம்பந் தப்பட்டவை ஆகும். அரசியல் கட்சிகள், தகவல் அறியும் உரி மைச் சட்ட வரம்புக்குள் வராது. 2017--18ஆம் நிதியாண்டில் தேர் தல் பத்திரங்கள் வாயிலாக திரட்டப்பட்ட நன்கொடைகள், தொகைகள் குறித்த விவரங் களை தேர்தல் ஆணையத்திடம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யலாம் என்று அந்த உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்து, அந்த ஆணை யத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரி யான கே.எஃப். வில்பிரட்டிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "ஆர் டிஅய் சட்ட வரம்புக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டு வரப்படவில்லை' என்றார். மத்திய தகவல் ஆணை யத்தால் கடந்த 2013ஆம் ஆண்டில் 6 தேசிய அரசியல் கட்சிகளும், ஆர்டிஅய் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப் பட்டன. இதை எதிர்த்து நீதி மன்றங்களில் தேசிய கட்சிகள் வழக்கு தொடுக்கவில்லை. அதேநேரத்தில், ஆர்டிஅய் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் விவரங்களை அக்கட்சிகள் அளிப்பதும் இல்லை. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக் களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்கள், உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள் ளன.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner