எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், மே 29-  நாட்டில் பெட்ரோல் விலைவாசி உச்சத் தைத் தொட்டுக்கொண்டு இருக் கும் நிலையில் ஃபிட் இந்தியா சவால் விடும் மோடிக்கு எதி ராக கேரள மக்கள் வித்தியாச மான ஒரு படத்தைப் பதிய விட்டுள்ளனர்.

நாட்டில் பல்வேறு பிரச் சினைகள் மிகப்பெரிதாக உரு வெடுக்கும் போது, அதை மக் களின் மனதில் இருந்து அகற் றும்விதமாக திசைதிருப்பும் செயலை செய்வதில் மோடி திறமையானவர். பிரச்சினைக ளைப் பற்றி ஒன்றுமே கூறா மல், அமைதியாக இருப்பார் அல்லது மன் கி பாத் என்ற பெயரில் தேவையில்லாததைப் பேசி அதை விவாதப் பொரு ளாக்கி விடுவார். நாடு முழு வதும் பண மதிப்பிழப்பின் போது மக்கள் அல்லல் பட்டுக் கொண்டு இருந்தனர். அப் போது மோடியின் தாயார் ஒரு வங்கியில் தன்னிடம் இருந்த பழைய ரூபாய்த் தாள்களை மாற்ற வரிசையில் நிற்கவைத்து, அதை நாடு முழுவதும் விளம் பரம் செய்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள்படும் அவலத்தை மறைத்துவிட்டார்.

இந்நிலையில் தொடர் விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து, கர்நாடக மாநில தேர்தலை கவனத்தில் கொண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பெட் ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது, இந்த மேலையில் மே 15ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டிசல் விலை உயரத்தொடங்கியது, இந்த விலையேற்றம் சாதாரணமாக இல்லாமல் கடுமையான சுமை யாக மக்களின் தலையில் ஏற் றப்பட்டது.

அருகில் உள்ள நாடுகளில் எல்லாம் இந்திய ரூபாய் மதிப் பில் ரூ 50-க்கும் குறைவாக விற் கப்படும்போது இந்தியாவில் மட்டும் ரூ.85-அய் தொட்டுவிட் டது, இதை எதிர்த்து நாடுமுழு வதும் போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், மத் திய விளையாட்டுத்துறை அமைச் சர் உடற்பயிற்சி செய்யும் காட் சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு என்னைப் போல் உடற்பயிற்சி செய்து இந்தியாவை ஃபிட் இந்தியாவாக மாற்றத் தயாரா என்று கேள்வி எழுப்பியிருந் தார்.

இதற்கு உடனே கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பவர் ஒரு காட்சிப் பதிவை வெளி யிட்டு மோடிக்கு சவால் விட்டி ருந்தார். அதில் நான் ஃபிட் இந்தியா சவாலை ஏற்றுக் கொண்டேன். மோடி இதற்கு தயாரா என்று மோடியைப் பார்த்து கேள்வி எழுப்பி இருந் தார்.

இதற்கு மோடி சில நிமிடங் களிலேயே பதிலளித்து விட் டார். விராட் கோலி உங்கள் சவாலை ஏற்றுக்கொண்டேன் விரைவில் ஒரு பதிவை அனுப்பிவைக்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்டமே கடும் கொந்தளிப்பை எதிர் கொண்டு 13 பேர் கொல்லப்பட்டனர் என்ற ஒரு செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது, 70-க்கும் மேற்பட் டோர் கடுமையான காயங்களு டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலை கிட்டத்தட்ட தென் மாவட்டங் களில் அவசரநிலைப் பிரகடனம் போன்ற ஒரு நிலை இருந்து வரும் நிலையில் மோடி இதை எல்லாம் கவனத்தில் கொள்ளா மல் ஒரு கிரிக்கெட் வீரரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

இதை ராகுல் முதல் பல எதிர்க்கட்சியினர் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், பெட் ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றி கவலைப்படாமல் இருக் கும் மோடியைப் பற்றி கேரள மக்கள் நையாண்டிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மோடிக்கு எதிரான வாச கம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளில் போராடி இருக்கிறார்கள். நிறைய பெட் ரோல் பங்குகளில் மக்கள் ஒன் றாகக் கூடி இப்படிப் போராட் டம் நடத்தி இருக்கிறார்கள்.

பெட்ரோல் பங்கில் உடற்பயிற்சி செய்துள்ளனர். இதோ பெட்ரோல் விலைவாசி உயர்வு எங்களைப் பாதிக்கிறது, இதை குறைக்கத்தயாரா என்று மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடியே அவர்கள் உடற் பயிற்சி செய்து போராட்டம் செய்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner