எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், மே 31- கேரளா வில் தாழ்த்தப்பட்ட கிறித்துவ இளைஞர் ஜாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, 29.5.2018 அன்று முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

கேரள மாநிலம், கோட் டயம் மாவட்டம் மணனம் நகரைச் சேர்ந்தவர் கெவின் பி ஜோசப். தாழ்த்தப்பட்ட கிறித் துவரான இவரும், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நீனுவும் கல்லூரி படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்துள்ள னர். நீனு உயர்ஜாதிவகுப்பைச் சார்ந்தவர். இருவரும் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்து உள்ளனர். இதில், நீனு வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படிப்பை முடித்த கெவின் துபாய்க்கு வேலைக்குச் சென்று கடந்த ஜனவரி மாதம் கேரளா திரும் பினார். இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாகத் திரு மணம் செய்ய முடிவெடுத்து பின் கடந்த வாரம் நண்பர்கள் உதவியுடன் கோட்டயம் அருகே ஏற்றுமனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில்  திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டது நீனுவின் பெற்றோர்களுக்குத் தெரியவந்ததை அடுத்து கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர். இதனை அடுத்து காவல் துறையினர், நீனுவை அவரது பெற்றோர் அழைத்து செல்ல உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து அடுத்து கெவின் கொல்லம் அருகே வசித்து வந்த தனது உறவினர் அனிஷ் வீட்டில் தங்கி இருந் தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வாகனத்தில் வந்த நபர்கள் சிலர் ஜோசப்பையும், உறவினர் அனிஷையும் கடத்திச் சென்று, பின்னர் அனிஷை மட்டும் செல்லும் வழியில் இறக்கி விட்டனர்.  இந்நிலையில், கொல்லம் அருகே தென்மலை கால்வாயில் ஜோசப் சடலமாக  கண்டுபிடிக்கப்பட்டார். இதனி டையே, கெவின் கடத்தப்பட் டது தொடர்பாக கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் அனிஷ் சார்பில் புகார் கொடுக் கப்பட்டபோது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். முதல்வர் பிண ராயி விஜயன் வருவதால், பாது காப்புக்குச் செல்ல இருப்பதா கக் கூறி புகாரை பதிவு செய்ய மறுத்துள்ளனர். அலைக்கழிக் கப்பட்ட பின்னர் நீண்டநேரம் கழித்துப் புகாரைப் பெற்றுள் ளனர்.

இந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக முதல்வர் பிணராயி விஜயனுக்கு தெரியவந்ததை அடுத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்று வேதனை தெரிவித்தார். மேலும், புகாரை ஏற்காமல் அலட்சியம் காட்டிய சம்பந்தப் பட்ட காவல் துறை அதிகாரிகள் இருவர் பணியிடைநீக்கம் செய் யப்பட்டுள்ளனர். இச்சம்பவத் துக்குப் பின்னர் கெவின் உடல் நேற்று (திங்கள்கிழமை) கொல் லம் மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உறவி னர்களிடம் ஒப்படைக்கப்பட் டது. இந்த ஆணவக்கொலை தொடர்பாக நீனுவின் தந்தை சகோதரர் மற்றும் உறவினர் இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இந்த ஜாதி ஆணவக் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரசு, உள்ளிட்ட எதிர்க் கட்சி களும், தலித் அமைப்புகளும் 29.5.2018 அன்று கோட்டயம் மாவட்டத் தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner