எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 31- இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாசங் கோயல். இவர் அம்மாநிலத்தின் தொழி லாளர் துறை முதன்மை செய லாளராக பணியாற்றி வருகி றார். இவரது மகன் சுபம் கோயல் அமெரிக்காவில் தங்கி அங்கு உள்ள பெடரல் வங்கி யில் துணை மேலாளராக பணி யாற்றி வந்தார்.

கடந்த மாதம் 28ஆ-ம் தேதி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த சுபம் தனது நண்பருடன் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் சென்றார். விடு முறைக்கு பின் கலிபோர்னியா விற்கு செல்ல இருந்தார். இந் நிலையில், சுபம் தனது நண் பர்களுடன் வெளியே சென்றி ருந்தார். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ ரது நண்பர்கள் பணத்தை கொடுத்துவிட்டனர்.

ஆனால் சுபம் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த கொள் ளையர்கள் அவரை துப்பாக்கி யால் சுட்டனர். இதில் சுபம் பரிதாபமாக உயிரிழந்தார். சுபத் தின் இழப்பு அவரது குடும்பத் தினருக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியது. அவர் தந்தை இந்திய வெளியுறவுத்துறையின் உதவியுடன் சுபத்தின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வந் தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner