எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. 11  சட்டமன்ற தொகுதிகளுக்கும், 4 மக்களவைத் தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதீய ஜனதா ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு சட்டமன்ற தொகுதி ஆக மொத்தம்  2  இடங்களை மட்டுமே கைப்பற்றி  படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரசு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

நாடு முழுவதும் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தரளி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே  பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற எல்லா தொகுதியிலும் காங்கிரசு, காங்கிரசு கூட்டணி, மாநில கட்சி கூட்டணிகள் மட்டுமே வென்றுள்ளன.

பீகார், ஜோகிஹாட்டில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் வெற்றி.

ஜார்க்கண்ட், சில்லி மற்றும் கோமியாவில்  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி  வெற்றி. கருநாடகா ஆர்.ஆர். நகரில் காங்கிரசு வெற்றி.

மேகாலயாவின் அம்பாதியில் காங்கிரசு வெற்றி.

பஞ்சாபின் சாகோத்தில் காங்கிரசு வெற்றி.

மகாராஷ்டிரா கடகோனில் காங்கிரசு வெற்றி. கேரளா செங்கணூரில் சிபிஎம் வெற்றி. உ.பி நூர்பூரில் சமாஜ்வாடி வெற்றி. மே.வங்கத்தின் மகேஷ்தலாவில் திரிணாமுல் வெற்றி.

மக்களவைத் தேர்தல்

மகாராஷ்டிராவின் பந்தாராவில் தேசியவாத காங்கிரசு வெற்றி.

நாகாலாந்தில் என்டிபிபி வெற்றி.  உபி கைரானாவில் ஆர்எல்டி வெற்றி. மகாராஷ்டிராவின் பல்காரில் மட்டும் பாஜக வென்றுள்ளது.