எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 1- மிக மோசமான வருவாய் இழப் பிலும், வராக் கடன் சிக்கலி லும் மாட்டித் தவிக்கும் இந் திய வங்கிகள் நீண்ட நாள் களுக்கு தாக்குப் பிடிக்க முடி யாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்த்ரா எச்சரித்துள்ளார்.

வராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அதில்பாதியளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப் புள்ளதாகவும், ரிசர்வ் வங் கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கை களில் சரிவைச் சந்தித்து வருவ தாகவும் முந்த்ரா கூறியுள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கி அண் மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 2015-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் கோடியாக இருந்த இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் அளவு 2017 ஜூன் 30-ஆம் தேதி ரூ. 6 லட்சத்து 89 ஆயிரம் கோடியாக உயர்ந்துள் ளது; குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வங்கி களின் வாராக் கடன் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள் ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், இந்தியா வின் 21 பொதுத் துறைவங்கி களில், 11 வங்கிகளின் வராக் கடன்அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பானது, அவற்றின் மொத்த சொத்து களின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக் கிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது. இதன் அடிப் படையிலேயே முந்த்ராவும், வங்கிகளின் மோசமான நிலை யைக் குறிப்பிட்டு எச்சரித் துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் சீர்தி ருத்தக் கண்காணிப்பில் உள்ள 11 வங்கிகளில் 10 வங்கிகள் தங்களது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள் ளன; அதில் 9 வங்கிகள் வராக் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித முன் னேற்றமும் காணவில்லை என் பதை முந்த்ரா சுட்டிக்காட்டி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner