எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குட்டி நாடான நேபாளத்திலிருந்து பெட்ரோல் வாங்கும் அவலம்

கவுஹாத்தி, ஜூன் 1-  இந்தியாவில் நாள்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல் விலை காரணமாக, பீகார் மற்றும் அருணாசலப் பிரதேச மக்கள் எல்லை நாடுக ளான பூடான் மற்றும் நேபாளத் திற்கு சென்று பெட்ரோல் வாங்கி வரும் அவலம் நிகழ்ந்து வரு கிறது.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்ந்துகொண்டே போகும் நிலையில், நேபாள எல்லையில் உள்ள பீகார் மக்கள்  இந்தியாவை விட நேபாளத்தில் பெட்ரோல் விலை 22 ரூபாய் குறைவு என்பதாலும், டீசல் 31 ரூபாய் குறைவு என்பதாலும் ராகுல மற்றும் சீத்தாமடி இரண்டு இடங்களில் உள்ள மக்கள் இந்தியா எல்லையில் உள்ள நேபாளத்திற்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்கள் சென்று பெட்ரோல் வாங்கி வாகனங்களுக்கு நிரப்புகின்றனர்.

காரணம் விலை குறைவே!

பெட்ரோல் விலை நிலவரம் இன்று காலை இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81.66 ரூபாய் மற்றும் டீசல் 73.97 ரூபாய் என்ற நிலையில் நேபா ளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 55.81 ரூபாய் என்றும், டீசல் 41.56 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் மதிப்பு இந்தியாவில் 100 ரூபாய் என்றால் அது நேபாளத்தில் 160.15 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேபாள நாட்டில் பெட்ரோல் விற்பனை நேபாள எல்லைக்குள் சென்று பெட்ரோல் வாங்கி வந்து இந்திய எல்லையில் விற்று காசு பார்க்கும் வேலையும் நடந்தேறிவருகிறது  சீத்தாமடி நேபாள எல்லைக்கும் இடையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஆகும்.

கடந்த சில நாட்களாக இந் திய - நேபாள எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை விற் பனை அதிகரித்துள்ளதாகவும், நேபாள எண்ணெய் நிறுவன அதிகாரியான ஜகதீஷ் யாத்வே தெரிவித்துள்ளார்.

பீகாரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் நட்டத்தினைப் பெற்று வரும் நிலையில், நேபாள பெட்ரோல் பங்குகள் லாபம் பெற்று வருகின்றன.   இதில் வேடிக்கை என்னவென்றால் இந் தியாவில் இருந்து தினமும் 250 டாங்கர் லாரிகளில் பெட்ரோலிய பொருட்கள் நேபாளத்திற்கு ஏற் றுமதி செய்யப்படுவதே ஆகும். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற் குக் குழாய் வழியாகப் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

என்ன காரணம்? இந்தியா வில் ராக்கெட் வேகத்தில் பெட் ரோல் விலை ஏறி வரும் நிலை யில் நேபாளில் எப்படி விலை குறைவு என்று பார்த்தால் அங்கு ஒற்றை வரி முறை கடைப்பிடிப் பதே காரணம் எனத் தெரியவந்து உள்ளது. இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை வசூலித்து வருகின்றன.

இதே போல் அஸ்ஸாம், சிக் கிம்  மற்றும் அருணாசல மாநில எல்லைப்பகுதியில் உள்ள மக் கள் பூடான் நாட்டிற்குச் சென்று பெட்ரோல் வாங்கிவருகின்றனர். சிலர் பூடானில் இருந்து பெட் ரோல் வாங்கிவந்து இந்தியாவில் கள்ளச்சந்தையில் விற்றுவருகின் றனர். இதனால் இந்த மூன்று மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் விற்பனையில் குழப்ப மான சூழல் ஏற்பட்டுள்ளது,

வல்லரசு நாடாக மாற்றம் செய்வோம் என்று கூறிக்கொண்டு வரும் இந்திய அரசு தற்போது அண்டை மாநிலங்களுக்கு சென்று தனது மக்கள் பெட்ரோலியப் பொருட்களை வாங்கும் அவலத் திற்கு ஆக்கியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner