எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 3 உத்தரப்பிரதேச மாநிலம், தாண்டா சட்டமன்ற தொகுதிக்கான பாஜக உறுப்பினர் சஞ்சுதேவி என்பவர் மோடியின் தூய்மை இந்தியா பரப்புரை என்பதன் பெயரால், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவி வண்ண மாலைகளை அணிவித்து, காவி நிற சால்வை அணிவித்து, அம்பேத்கர் சிலையில் நெற்றிப்பகுதியில் பொட்டு வைத்து  அவமதித்துள்ள தகவல் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தியுள்ளது. மேலும், அப்போது உட னிருந்த அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓதி னாராம்.

தாண்டா சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட திருவா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உள்ள பகுதிக்குச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சு தேவி சிலையின்மீது பாலை ஊற்றியுள்ளார். அதன்மூலம் தீட்டு கழித்தார் என்று கூறப் படுகிறது.

அவருடன் அர்ச்சகர் ஒருவரும் உடன் இருந்தாராம். அவர் மந்திரங்களை ஓதி னாராம். இவை அனைத்தும் கடந்த 31.5.2018 அன்று அரங்கேறியுள்ளன.

அடுத்த நாளில் பாஜக சட்டமன்ற உறுப் பினர் சஞ்சு தேவியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, பிரதமர் மோடி யின் தூய்மை இந்தியா திட்டத்தையே தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

சஞ்சுதேவி கூறியதாவது:

டாக்டர்அம்பேத்கர்சிலையைநாங் கள் தூய்மைப்படுத்தினோம். அம்பேத்கர் சிலையைச் சுற்றி காவி சால்வை போர்த் தியதை குறிப்பிட்ட ஒரு கொள்கையுடன் தொடர்புடையதாகக் கூறக்கூடாது என்றார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினரின் செயலை பகுஜன் சமாஜ் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரிபுவன் தத் கூறிய தாவது:

இச்செயல் மிகவும் கடுமையான கண் டனத்துக்குரியது. குறிப்பிட்ட வகுப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இச் செயல் அமைந்துள்ளது. இச்செயலுக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால், பகுஜன் சமாஜ் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே பாதான் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசப் பட்டது. இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் காவி நிறத்தை நீக்கிவிட்டு பழைய நிலையில் சிலையை இயல்பான நிறத்துக்கு மாற்றினார்கள்.

தற்பொழுது அம்பேத்கர் சிலையையே ‘புனித'ப்படுத்துவதாகபாஜகவினர் கிளம்பியுள்ளார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner