எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்ஸ்வால், ஜூன்.3 -இந் துத்துவா பேர்வழியான கும் மனம் ராஜசேகரன், ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு, மிசோ ராம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கும்மனம் ராஜசேகரன் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரனை, மிசோராம் மாநில ஆளுநராக நியமித்து மோடி அரசு அண்மை யில் உத்தரவிட்டது. மிசோரம் மாநில ஆளுநராக இருந்த சிர்பே ஷர்மாவின் பதவிக்காலம், முடிவடைந்த தால் கும்மனத்தை மிசோரா மிற்கு அனுப்பியது பாஜக அரசு.மிசோராம், கிறிஸ்தவ மக்கள் நிறைந்த மாநிலம் என்ற நிலையில், அங்கு சங்-பரிவாரங்கள் நீண்ட காலமா கவே பல்வேறு குழப்பங்களை விளைவித்து வருகின்றன; இதனிடையே, 2018ஆம் ஆண்டு இறுதியில், மிசோராம் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளதால், கும்மனம் ராஜசேகரன் ஆளுநராக இருந் தால், அது தங்களுக்கு சாதக மாக இருக்கும் என்று கணக் குப் போட்ட பாஜக இந்த வேலையைச் செய்தது. இந் நிலையில், கும்மனம் ராஜ சேகரன் நியமனத்திற்கு மிசோ ராம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, மிசோராம் மக்கள் அடையாள பிரதித்துவக் கட்சியானது, கும்மனம் ராஜ சேகரன் மிசோராமை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி வருகிறது.கும்மனம் ராஜ சேகரன் மதச்சார் பின்மைக்கு எதிரானவர்; ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்துபரிஷத் அமைப் புகளில் தீவிரமாகச் செயல் பட்டவர்; திருவனந்தபுரத்தில் அமெரிக்க போதகர் ஜோசப் கூப்பர் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியும் கூட. இவர் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ போதகர்களைத் திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்றியவரும் ஆவார். அப்படிப்பட்ட கும்மனம் ராஜ சேகரன் மிசோராம் மாநிலத் துக்குத் தேவையில்லை என்று கடுமையான அறிக்கை ஒன் றையும் அந்த கட்சி வெளியிட் டுள்ளது. கும்மனம் ராஜ சேகரனை ஆளுந ராக ஏற்கக் கூடாது என்று பல்வேறு அமைப்புகளின் ஆதரவையும் இந்தக் கட்சி திரட்டி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner