எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 3 சுய விவரங்கள், வங்கித் தகவல்கள் போன்றவற்றைத் திருடும் புதிய வைரஸ்கள் இந்திய இணையதள வெளியில் ஊடுருவியிருப்பதால், பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வரும் இந்திய கணினி அவசர நிலை பொறுப்புக் குழு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறப் பட்டுள்ளதாவது:

இணையதளம் மூலமாக, “விர்ச்சுவல் கேர்ள்ஃபிரண்ட்’, “பாண்டா பேங்கர்’ என்ற இரு வைரஸ்கள் ஊடுருவியுள்ளன.

அவற்றில், விர்ச்சுவல் கேர்ள் ஃபிரண்ட் வைரஸ், ஆன்ட் ராய்ட் செல்லிடப்பேசியில் விளை யாட்டுச் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, பயன்பாட்டா ளருக்குத் தெரியாமல் அவரது செல்லிடப் பேசிக்குள் ஊடுருவி விடுகிறது. அதன் பிறகு, பயன் பாட்டாளரின் தகவல் தொடர் புகள், குறுந்தகவல்கள், அவரு டைய செல்லிடப்பேசியில் பதி விறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகள், அந்தச் செயலிகளில் உள்ள ரகசிய விவரங்கள் ஆகியவற்றை அந்த வைரஸ் திருடிவிடும். அதன் பிறகு, பயன்பாட்டாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுவது போன்ற மோச டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

இதேபோல், பாண்டா பேங்கர் என்ற வைரஸும், செல்லிடப்பேசி செயலி மூலம் ஊடுருவி, பயன்பாட்டாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவது, அதன் மூலம் பயன் பாட்டாளர்களின் வங்கிக் கணக்கு களில் இருந்து பணம் திருடுவது போன்ற மோசடிகளுக்கு பயன் படுத்தப்படுகிறது.

செய்ய வேண்டியது என்ன?:

எனவே, இந்த வைரஸ் தாக்கு தலில் இருந்து தப்புவதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பான வழிமுறைகளில் இணை தளங்களைக் கையாள வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு வரும் வேண்டாத மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்கக் கூடாது. புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, அதை ஏற்கெனவே பயன் படுத்தியவர்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்கலைப் படித் துப் பார்க்க வேண்டும். பாது காப்பில்லாத, அறிமுகமில்லாத வை-ஃபை இணைதள இணைப்பு களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner