எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

மும்பை, ஜூன் 4 மகா ராஷ்டிரா மாநில காங்கிரசு கட் சியின் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி, அரசின் செலவுகள் ஆகியவை மிக முக்கியமான 4 அமைப்புகள் ஆகும். அது காரின் 4 சக்கரங்களை போன் றது. ஆனால், தற்போது பா.ஜ.க ஆட்சியில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி ஆகியவை நலிவ டைந்து உள்ளது. 3 சக்கரங்கள் பஞ்சர் ஆன காரைபோல இந்திய பொருளாதாரம் மாறி யுள்ளது.

சரியான முறையில் அரசின் செலவுகள் மட்டுமே இயங்கு கிறது. அரசின் செலவுகளை ஈடுசெய்ய பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற வரிச் சுமைகள் மக்களின் மீது ஏற்றப் படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. நம் நாட் டில் மட்டுமே 5 அடுக்கு ஜி.எஸ்.டி வரி உள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்வதில் இருந்தும் சமீப காலமாக நாம் எவ்வித லாப மும் பெறுவதில்லை. மத்திய பா.ஜ.க அரசின் பிரதான் மந் திரி முத்ரா யோஜனா திட்டத் தின் மூலம் ஆரம்பத்தொகை யாக தனி நபருக்கு 43 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி கூறியது போல் பக்கோடா கடை மட்டுமே போட முடியும்.

ஆனால், பா.ஜ.க ஆட்சி யில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும்போது பொருளாதார பாதிப்பு சரி செய்யக்கூடியது ஆகும். பா.ஜ.க அரசு ஒரு சில சமூகத்தினரை 2-ஆம் தர குடிமகன்களாக அறிவித்தது. மக்களின் உணவு பழக்கங்கள் மீதும் கலாச்சார பழக்கவழக் கங்கள் மீதும் இந்த அரசு அமைதியின்மையை ஏற் படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner