எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக மீது காங்கிரசு கட்சி புகார்

போபால், ஜூன் 4- மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ள தாக காங்கிரசு கட்சியின் சார் பில் பாஜகமீது தேர்தல் ஆணை யத்தில் புகார் செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநில காங்கிரசு தலைவர் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், டில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரி களை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

காங்கிரசு கட்சியினரின் புகார் குறித்து விசாரணை நடத் துவதற்காக தேர்தல் ஆணையம் 2 குழுக்களை அமைத்து உத் தரவிட்டது. விசாரணை அறிக் கையை வரும் 7ஆ-ம் தேதிக்குள் அளிக்க குழுக்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட் டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலையில், மாநில காங்கிரசு கட்சித் தலை வர் கமல்நாத் தலைமையில், கட்சியின் மூத்த தலைவர்கள் டில்லியில் உள்ள மத்திய தேர் தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் கமல்நாத் செய்தியா ளர்களிடம் கூறும்போது, மத் தியப் பிரதேசத்தில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதா வது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி ஆகியவை பல தொகுதிகளில் இடம்பெற்று உள்ளது. இதுகுறித்து ஆதாரங் களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். உடனடி யாக போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என் றும் வலியுறுத்தி உள்ளோம். மேலும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட அதி காரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner