எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதல்அமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, ஜூன் 4- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (3.6.2018) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கையாளும் முறை தவறு. காங்கிரசு ஆட்சி யில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய் யும் முறை இருந்து வந்தது. பிரதமர் மோடி அதை 15 நாட்களுக்கு ஒருமுறை என்றும் தற்போது தினந்தோறும் விலை நிர்ணயம் என்றும் மாற்றி யுள்ளார். தற்போது எண்ணை நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயிக்கின்றன. மத்தியில் காங்கிரசு ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை அதி கமாக இருந்தபோது பெட் ரோல், டீசலை குறைந்த விலைக்கு விற்றது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை அதிக விலைக்கு விற் கப்படுகிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. தற் போது பெட்ரோல், டீசல் விலையை செல்லாத 1 பைசா, 4 பைசா, 5 பைசா என குறைத்து வருகிறது. பெட் ரோல், டீசல் விலை உயர்வு தான் பிரதமர் மோடியை வீட் டிற்கு அனுப்பும்.

சென்னையில் இருந்து புது வைக்கு வரும் கிழக்கு கடற் கரை சாலையை 4 வழி சாலை யாக மாற்றி அமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என்னை சந்தித்து பேசினர். இந்த சாலை மகா பலிபுரத்தில் இருந்து புதுவை பல்கலைக்கழகம், ஊசுடு ஏரி, உளவாய்க்கால், வில்லியனூர் வழியாக விழுப்புரம் நாகப் பட்டினம் சாலையை அடைய உள்ளது. இதன் மூலம் புது வையில் இருந்து 1 மணிநேரத் தில் சென்னைக்கு செல்ல முடி யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner