எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 5  உ.பி.யில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ. தோல்வியுற் றதற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை முதல்வராக அறிவிக்காததே என அம்மாநில பா.ஜ.க அமைச் சர் குற்றம்சாட்டியுள்ளார்.

உபி.யில் கெய்ரானா மக்களவைத் தொகுதி, நூர்புர் சட்டசபை தொகுதி ஆகிய வற்றிற்கு கடந்த வாரம் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ. தோல் வியடைந்தது. ஆளும் கட்சியாக இருந்தும் பா.ஜ. தோல்வியடைந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர வையில் அமைச்சராக உள்ள ஓம்பிரகாஷ் ராஜ்பஹர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட் டியில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் பா.ஜ. தோல்வி யுற்றதற்கு 2017-ஆம் நடந்த சட்டசபைதேர்தலில் கேசவ் பிரசாத் மவுரியாவை முதல்வ ராக பா.ஜ. மேலிடம் அறிவிக் காததே காரணம். பா.ஜ. வெற்றி பெற்று முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியா அறி விக்கப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக பா.ஜ. மேலிடம் அறிவித்து விட்டது. தற்போதைய முதல் வர் ஆதித்யாநாத் கரும்பு விவ சாயிகள் பிரச்சினையை தீர்க் காமல் உள்ளார்.