எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 5- இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கோஹி னூர் வைரம் உட்பட பழங்கால விலை மதிப்பற்ற பொருட் களை மீட்க பிரதமர் அலுவலக மும், வெளியுறவுத்துறை அமைச் சகமும் எடுத்த முயற்சிகளை தெரிவிக்க வேண்டும் என மத் திய தகவல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத் தில் இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம், சுல்தான் கன்ஜ் புத்தர் சிலை, நசக் வைரம், திப்பு சுல்தானின் வாள்கள், மோதிரம் மற்றும் இயந்திர புலி, மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம், ஷாஜகானின் பச்சை மாணிக்க கோப்பை, சரசுவதி மார்பிள் சிலை உட் பட பல அரிய பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டன.

இவை எல்லாம் உலக நாடு களில் உள்ள அருங்காட்சியகங் களில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. இவற்றை மீட்பதற்கு மத்திய அரசு எடுத்த முயற்சி களின் விவரத்தை தெரிவிக்கும் படி அய்யங்கார் என்பவர் தக வல் உரிமை மனு மூலம் வெளி யுறவு அமைச்சகத்திடம் கேட் டார். இந்த மனு தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட் டது. இதற்கு அத்துறை அதி காரி அர்ச்சனா அஸ்தானா அனுப்பிய பதிலில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 25 தொல் பொருட்களை பல நாடுகளில் இருந்து மீட்டுள்ளோம். தொல்பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷம் சட்டம் கடந்த 1976ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. எனவே, அதன்பின் இந்தியாவி லிருந்து சட்ட விரோதமாக எடுத் துச் செல்லப்பட்ட  தொல் பொருட்களை மீட்கத்தான் எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

சுதந்திரத்துக்கு முன் கடத் தப்பட்ட அரிய பொருட்களை மீட்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. இந்த மனு எங்க ளுக்கு ஏன் அனுப்பப்பட்டது என புரியவில்லை என கூறி யுள்ளார்.  இதையடுத்து, மத் திய அரசுக்கு தகவல் ஆணையர் தர் ஆச்சார்யலு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  மார்பிள் வக்தேவி சிலை, சுல் தான்கன்ஜ் புத்தர் சிலை, சிவ னின் கண் என அழைக்கப்பட்ட நசக் வைரம், வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் போன்ற பாரம்பரிய பொருட் களை மீட்க மக்கள் விரும்புகின் றனர். சுதந்திரம் பெற்றது முதல் இது தொடர்பாக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்திட மும், பல அரசுகளிடமும் அளிக் கப்பட்டுள் ளன. இவற்றை மீட்பதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்வதில் மக்கள் குழம்பம் அடைந்துள்ளனர்.

தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு உள்ள அதிகாரம் தெரியாமல், தகவல் மனுவை அந்த துறைக்கு மத்திய தகவல் அதிகாரிகள், பிரதமர் அலுவல கம், கலாசாரத்துறை ஆகியவை அனுப்பியது ஆச்சர்யம் அளிக் கிறது.

தொல்பொருட்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து முயற் சிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கலாச்சாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதா என்பதை அந்த துறை அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும்.

பிரதமர் அலுவலகமோ, வெளியுறவு  அமைச்சகமோ இது பற்றி ஏதாவது முயற்சி எடுத் திருந்தால், அதை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். ஆர்டி அய் சட்டத்தின் 8(1) பிரிவை கூறி இந்த தகவல் தெரிவிப் பதை மறுக்க முடியாது என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner