எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,  ஜூன் 6 முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் இயற்கைப் பேரிடர் மேலாண் மைக்கான திட்டத்தை தயாரிக்க மத்திய அரசின் துணைக் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித் தது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள மாநிலத் தைச் சேர்ந்த ரஸல் ஜாய் என்ற வழக் குரைஞர் உச்ச நீதிமன் றத்தில் பொது நல மனு தாக்கல் செய் திருந்தார்.

அதில், முல்லைப் பெரி யாறு அணை கட்டப்பட்டு நூறாண் டுகளைக் கடந்துவிட்ட தால், அதன் ஆயுள்காலம், பாது காப்பு விஷயங்கள் குறித்து சர்வதேச வல்லுநர்கள் குழு மூலம் ஆய்வு நடத்த வேண்டும்; அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணு கோபால் ஆஜராகி, 'முல்லைப் பெரியாறு அணையின் கட்டு மானம் உறுதியாக இருப்பதாக அணைப் பகுதியை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணையம் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

இதனால், அணையை இடிக் கக் கோருவது தேவையற்றது' என்றார். தமிழக அரசின் வழக் குரைஞர்களும் இதே வாதத்தை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, மனுதாரரின் கோரிக் கையை ஏற்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கணிக்க முடியாத வகையில் ஏதாவது பேரிடர் ஏற்படும்பட் சத்தில் அதை பிரத்யேகமாக கையாளுவதற்கான வழிமுறை களை உருவாக்குவதற்கான குழு வை மத்திய அரசும், தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகளும் தனித் தனியாக அமைக்க வேண் டும்; இக்குழுக்கள், அணைப் பகுதியில் பேரிடர் அம்சம் தொடர் பான விஷயங்களை மட்டுமே கையாள வேண்டும்.  அணையின் ஆயுள்காலம், பாது காப்பு விஷ யங்கள் உள்ளிட்ட வற்றை அதற் கென ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ள குழுக்கள் தான் கையாள வேண்டும் என்று கூறி மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இந்நிலையில், உச்ச நீதி மன்ற உத்தரவின்படி 10 பேர் கொண்ட துணைக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்பு தல் அளித்தது.

மத்திய நீர்வளத் துறை செய லாளர் தலைமையிலான அந்தக் குழுவில், தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை, மத்திய மின்சாரத் துறை, மத்திய தொலைத் தொடர்புத் துறை, மத்திய வேளாண்துறை ஆகிய வற்றின் பிரதிநிதிகள், தமிழக, கேரள அரசுகளின் பிரதிநிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள் ளனர். குழுவின் அமைப்பாளராக மத்திய நீர்வளத் துறை இணைச் செயலாளர் உள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner