எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 6- மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக 40 நாள் கண்டனப் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் அமைப் பான ஏஅய்டியூசி அறிவித்துள் ளது. தொழிலாளர்களுக்கு விரோ தமான நடவடிக்கைகளை மத் திய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஏஅய்டியூசி அமைப்பின் தலைவர் அமர்ஜித் கவுர் டில்லியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் தேசிய தொழிலாளர்கள் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. அதில், பிரதமர் மோடி உள் ளிட்டோர் கலந்துகொள்வதாக வும் இருந்தது. ஆனால், திடீ ரென மாநாட்டை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்குக் காரணம் தொழிற்சங்க அமைப்புகளை பிரதமரால் எதிர்கொள்ள முடி யாது என்பதுதான்.

பேச்சுவார்த்தையிலோ, விவாதங்களிலோ மத்திய அர சுக்கு நம்பிக்கை கிடையாது. மாறாக முதலாளித்துவ சிந்தனை களில்தான் நம்பிக்கை உள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளை ஒடுக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு. அதற்கு வழிவகுக்கும் வகையில் தொழி லாளர் நலச் சட்டங்கள் பலவற்றி லும் திருத்தம் மேற்கொண்டிருக்கி றது.

மொத்தத்தில் தொழிலாளர்க ளுக்கு எதிரான ஓர் ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. அதற்கு தகுந்தாற்போல, இந்த நாட் டையே பிரதமர் மோடி விற்ப னைக்குக் கொண்டு வந்துவிட் டார். இந்த உண்மைகளை எல் லாம் மக்களிடத்திலே எடுத்து ரைத்து மத்தியில் மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள் ளோம்.

அதன் ஒருபகுதியாக, பிரத மர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தை 40 நாள்களுக்கு நடத்த உள் ளோம். எதிர்வரும் 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜ கவை வீழ்த்துவதற்கான நடவ டிக்கையாக இதை நாங்கள் முன் னெடுத்திருக்கிறோம் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner