எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 7- -காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செய லாளர் யு.பி.சிங் தெரிவித்து உள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங் கிய உச்ச நீதிமன்றம், தங்க ளின் தீர்ப்பை செயல்படுத்துவ தற்கு, வரைவுச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு மத் திய அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கு வதாக மத்திய அரசு தெரிவித்தது.

அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தென்மேற் குப் பருவ மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக- ஜூன் மாதத்திற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும், அது தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண் டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பை அரசித ழில் வெளியிட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங் செயல் படுவார் என்றும், ஆணையத் திற்கான நிரந்தரத் தலைவர் விரைவில் நியமனம் செய்யப் படுவார் என்றும் தெரிவித்தி ருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்காலத் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டு உள்ளார்.